• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உதவி

By Staff
|

"சுனாமி வந்து எங்க ஊரில் நிறைய பேர் இறந்து விட்டனர்", தெரியுமா ? என்று என் நண்பன் ஜான் லெசிக்கையும், சூடியையும் கேட்டேன்.

"ஆமாம். பயங்கரம். உங்க வீட்ல எல்லாம் செளக்யமா ?" என்றச் சம்பிரதாயமான பேச்சுக்களிலிருந்து, உரையாடல் வேறு பக்கம் போகஆரம்பித்தது.

"அமெரிக்கா அதிகம் கொடுக்க மாட்டேன். என்கிறதே ?" என்று வம்பிழுத்தேன். "அதெல்லாம் இல்லை. எல்லாரைக்க் காட்டிலும் நாங்கஅதிகம் கொடுக்கிறோம். 40 மில்லியன் டாலராக்கும்" என்றான் ஜான்.

"ஆனால் எஈக பார்த்தால் அது கொசுறு" என்று ஐ.நா. சபை சொல்லுகின்றதல்லவா ?" என்று பகன்றேன்.

"ஆனால் பார், நாங்க பணக்காரங்க. பக்கத்து வீட்டுப் பணக்காரங்க காட்டிலும் அதிகம் கொடுக்கிறோமே ?"

"ஜான், நாம பணத்தில் மிகக் கொழுத்தவர்கள் என்று ஞாபகமிருக்கட்டும்" என்றாள் சூடி.

"இந்தியா வியாபாரத்தில் உலகத்திலே நான்காவது இடத்தில் உள்ளதாம். வெளிநாடு உதவி வேண்டாமென்கிறதாம்" என்றான் ஜான்.

"வெளிநாட்டு தன்னார்வ உதவி அமைப்புகளுக்கும், ஐ.நா. உதவி அமைப்புக்களுக்கும் வேண்டாமென்று சொல்ல வில்லையே ?" இதுநான்.

"சரி. அனுப்பும் டாலர்கள் எப்படி செலவழிப்பார்கள் ?" என்றான் ஜான்.

"அனுப்பும் டாலர்களை, வாங்கி பங்கிட்டு கொடுப்பார்கள்" .

Sea watet entering into coastal village"எனக்கு ஆனால் எப்படி இருப்பேனென்று கற்பனை பண்ண முடியலை" என்றாள் சூடி.

மாறி மாறி, கற்பனைகள் எங்களை பாதிக்கப்பட்டோரின் நிலைமைகளை எண்ணிப் பார்க்க வைத்தது.

"முதலில் நான் என் உடமைகளை இழந்தால், உடை, அடுத்த வேளைக் குடிநீர், உணவு மற்றும் கழிப்பிடம் பற்றி கவலைப்படுவேன்.என்னுடன் உயிருடன் இருப்பவர்களின் இதேப் பிரச்சினைகளையும் களைய முனைவேன்"

"அடுத்து இருக்க இடம் வேண்டும்"

"அடுத்துக் கடலில் போய் மீன் பிடிக்க எனக்கு உபகரணங்கள் தேவை"

"எனது உடம்பு நோய் கொள்ளாமலிருக்கவேண்டும். மருந்து, மாத்திரை வேண்டும்"

"எனது உறவினர்கள் இறந்திருப்பதால், அதன் செலவுகள் வேறு இருக்கின்றன".

"எனது மனதின் நிலையைக் கவனிக்க டாக்டர்கள் இருந்தால் நல்லது"

"எனது சுற்றுவட்டாரங்கள் கெட்டு போயிருக்குது. அதைச் சரிப்படுத்தினால்தான் முன்னே மாதிரி காலத்தை ஓட்ட முடியும்.இல்லையென்றால் இடம் மாறணும்"

"அனுப்பும் டாலர்களை சொந்தம் ஆக்கிக் கொள்வார்களா ? பதுக்குவார்களா ?" என்று ஜான் கேட்டான்.

"பதுக்க கட்டாயம் தோன்றும். எப்படி யாருக்குச் செலவழிப்பது என்று வரைமுறையிருந்தால், இதை ஓரளவு சமாளிக்கலாம். அனுப்பியபணம், செலவழிக்கப்பட்ட பணம் எவ்வளவு என்பதை ஒவ்வொரு தன்னார்வ தொண்டு நிறுவனமும் வெளியே தெரிவிக்க வேண்டும்.ஆனால் சில நிறுவனங்கள் இவ்வாறு பெறப்பட்ட பணத்தை வேறு செலவழிக்க முயலும். மனசாட்சிபடி நடந்து, குறுகிய, நெடுநாள்திட்டங்கள் வேண்டும்" என்றேன்.

"அரசாங்கத்திற்கு அனுப்பாதே. எங்கள் அரசாங்கம் திட்டமிடும் 1 டாலரில் அதிகப்பட்சம் 20% தான் தனி மனிதனுக்குப் போகிறது"என்றேன்.

"சரி உன்னை நம்பி நீ சொல்லும் நிறுவனத்திற்கு அனுப்புகின்றேன்." என்றான் ஜான்.

சொல்லிவிட்டேன், ஆனால் யாருக்கு அனுப்பினால் சரியாகப் போய்சேரும் ?. இன்றைக்கு 50 நாள் கழித்து. நான் அனுப்பும் பணம்உண்மையில் பயன்படுமா ?" என்று யோசித்தேன்.

"சரி. கவலைப்படாமல் அனுப்புவோம். நல்ல எண்ணத்தில் நம்மவர்களை நம்பி அனுப்புவோம்" என்று நிறைய நண்பர்கள் மூலம் சேர்த்தபணத்தினை அனுப்பினேன்.

2006 புத்தாண்டில் பத்திரிக்கையில் "நடந்து ஒரு வருஷமாச்சு சார்! ஒண்ணும் கிடைக்கல" என்று பாதிக்கப்பட்ட ஒரு மீனவக்குடும்பம்சொல்லிக் கொண்டிருக்கலாம்.

உதவி நிச்சயமில்லை.

- கிருஷ்ணக்குமார்(kksash@aol.com)

இவரது முந்தைய படைப்பு:

1. அவசர உதவி

2. சுழற்காற்று

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more