• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குமரி மாவட்டத்தில் அரிய வகை மணல் கொள்ளை

By Staff
|

கடந்த ஜூன் மாத இறுதியில் கடற்கரையோரம் மணல் அள்ள முயன்ற தனியார் கம்பெனி ஒன்றைத் தடுத்த மீனவர்களுக்கும்,தனியார் கம்பெனி ஆட்களுக்கும் இடையில் குமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரையில் மோதல் ஏற்பட்டது. இப்பிரச்சனபற்றி விசாரிக்க அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் குமரி மாவட்ட அமைப்பு உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்தது.அக்குழுவிற்கு காந்திகிராமப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர். மார்கண்டன் தலைமை வகித்தார். இக்குழுவில்அகில இந்திய வழக்கறிஞர் சங்கத் தலைவர் செபாஸ்டின், பொச்செயலாளர் பரமதாஸ், செயற்குழு உறுப்பினர் மரிய ஸ்டீபன்,வழக்கறிஞர்கள் திருமதி கிறிஸ்டல் பபிதா, திருமதி ஜீவாசந்திரசேகர், சகாய அரசு, நிலவியல் நிபுணர் ராஜா முகமது (காரைக்குடி)ஆகியோர் இருந்தனர்.

Seaஇக்குழு கடற்கரை கிராமங்களான மிடாலம், மேல்மிடாலம், இனயம் போன்ற கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வுசெய்தது. மிடாலம், மேல் மிடாலம் பங்கு கிறித்துவ பாதிரியார்கள் இருவரையும், இக்கிராம முக்கியஸ்தர்களாகிய ராபின், வின்செண்ட்,ஜெகன், சேவியர், ரேமாண்ட் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களையும் 2004, ஜூலை 7 மற்றும் 8 தேதிகளில் சந்தித்ப் பேசியது.மேலும் குமரி மாவட்ட ஆட்சித் தலைவர், மத்திய அரசின் அருமண் கனிம ஆலை நிர்வாகிகள் மற்றும் குமரி மாவட்டசுற்றுச்சூழல் குழுவின் தலைவர் சந்தானம் ஆகியோரயும் சந்தித்த.

குழு மேற்கொண்ட விசாரணயில் கீழ்கண்ட உண்மைகள் புலனாயின.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களின் கடற்கரையோரங்களில் மணல் எடுக்கும் விவி மினரல் என்றகம்பெனிக்காரர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் நிலம் வாங்கியுள்ளனர். கடற்கரையோரதென்னந்தோப்புகள் உள்ளிட்ட பட்டா நிலங்களையும், கடல் அரிப்பால் கடலுக்குள் சென்றுவிட்ட பட்டா நிலங்களையும் கூட பணம்கொடுத்து வாங்கியுள்ளனர். இந்த செயலுக்கு வருவாய்த் துறையினரும் உதவியாக இருந்துள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி இம்மாவட்டக் கடலில் கலக்கும் ஆறுகள் அரியவகை உலோகங்களை அரித்துவருகின்றன. கடலில் கலக்கும் நீரில் உள்ள இந்த கனரக மணலை கடல் அலை கரையில் ஒதுக்குகிறது. அணு சக்தி மற்றும் அணுஆயுதங்களுக்குத் தேவையான தோரியம் போன்ற கதிரியக்க மூலகங்களின் கூட்டுப்பொருளான மோனோசைட் உட்படடைட்டானியம் போன்ற உயர் உலோகங்கள் இம்மணலில் உள்ளன. இந்திய மற்றும் சர்வதேச சந்தையில் மிக அதிக விலைபெறுகின்ற இம்மணலினைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விவி மினரல் என்ற தனியார் நிறுவனம் முயன்றுவருகிறது.தனது வியாபார நடவடிக்கைகளில் பல சட்டவிரோத நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொண்டதாக ஏற்கனவே புகார்கள்உள்ளன.

இந்திய அருமணல் நிறுவனம் (Indian Rare Earth Limited-IREL) என்ற அரசுத்துறை நிறுவனம் குமரிமாவட்டத்தின் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனமே இதுநாள் வரை இம்மணலைஎடுப்பதற்கான உரிமை பெற்றதாக இருந்தது. பாதுகாப்புத் துறையிலும் தனியாரை அனுமதிப்பது என்ற அரசின்கொள்கை மாறுதல் காரணமாக அருமணல் எடுப்பு நடவடிக்கையில் தனியார் நடவடிக்கைகள்தீவிரமடைந்துள்ளன.

இந்திய அருமணல் நிறுவனம் கடற்கரையோரத்தில் அலையால் அடித்து வரப்படும் மணலைமீனவர்களைக் கொண்டு வாருகிறது. அதற்காகச் செயல்படும் சங்கங்களின் மூலம் குறந்தபட்சம் மீனவர்குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கிடக்கிறது.

எந்த மணலை விவிமினரல் கொள்ளையடிக்கப் பார்க்கிறது?

மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து ஆறுகளால் கொண்டுவரப்படும் மணலில் இல்மினைட் (ILMENITE) ருட்டைல்(RUTILE) ஜிர்கான் (ZIRCON) கார்னெட் (GARNET) மோனோசைட் (MONOZITE) ஆகிய வேதியியல்கூட்டுப்பொருட்கள் அடங்கியுள்ளன.

இவற்றில் இல்லுமினைட் பெயிண்ட், காகிதம், ரப்பர், துணி தொழில்கள் மற்றும் இன்ன பிறவற்றில் பயனாகின்றடைட்டானியம் டை ஆக்சைடு தயாரிப்பதற்குப் பயனாகிறது. மேலும், விண்வெளி தொழில் நுட்பத்திற்கும் ரசாயனதொழிலகங்களுக்குமான டைட்டானியம் அலாய் தயாரிக்கவும் பயனாகிறது.

ருட்டைல் வெல்டிங் ராடு தயாரிப்பிலும், ட்ைடானியம் டையாக்சடு மற்றும் டைட்டானியம் அலாய் தயார்செய்யவும் பயனாகிறது.

ஜிர்கான், உலைக்களங்களில் மோல்டுகள், உட்கரு தயார் செய்யவும் ஊதுளையின் முகப்பாகவும், செராமிக் மற்றும்கழிவறை குளியலறை உபகரணங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. ஜிர்கனியம் ஆக்சைடும் அதன்உப்புகளும் ரசாயன மற்றும் மின்னணுத் தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன.

கார்னெட் மரம், கண்ணாடி, தொலைக்காட்சி படக்குழாய் போன்றவற்றை பாலீஷ் செய்யவும், (ஆலைகளில்,ஊதுளைகளில் இன்னும் அதுபோன்ற உயர் வக பயன்பாட்டுக்காக வண்ணம் தீட்டுவதற்கு முன்னதாக)சமனப்படுத்துவதற்காகச் செய்யப்படும் சேண்ட் பிளாஸ்ட்டிங்கிலும், கடினமான உலோகங்கள (சூடாக்காமல்வெட்டும் உயர் ரக தேவைகளுக்காக) தண்ணீரைக் கொண்டு வெட்டுவதிலும், தண்ணீர் வடித்தலிலும் பயனாகிறது.

மோனோசைட் மின்னணு மற்றும் ரசாயன தொழிலகங்களில் பயன்படுத்தப்படும் அரிய உலோகங்களின்உப்புக்களைத் தயார் செய்யப் பயனாகிறது. தோரியம் நைட்ரேட் பெட்ரோமேக்ஸ் லைட் போன்றவற்றில்மேண்டுளாகப் பயன்படுகிறது. அணு உலை மற்றும் அணு குண்டு செய்வதற்கான தோரியம் மற்றும் யுரேனியம்மோனோசைட்டிலிருந்து கிடக்கிறது.

மீன் பிடியில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் இவ்வாறு கிடைக்கும் வருமானம் மீனவர்களுக்கு உத்திரவாதமானஒன்றாக இருக்கிறது. மேலும் இவ்வாறு அள்ளப்படும் மணல் அலையடித்துக் கொண்டு வரப்பட்டதாகஇருப்பதாலும், மிக மேலாக வாரப்படுவதாலும், எடுக்கப்பட்ட மணல் மீண்டும் அலை இயக்கத்தால் ஈடுசெய்யப்படுவதாலும் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பையும் செய்வதில்லை. கடற்கரையிலும் அதனை மீனவர்கள்பயன்படுத்துவதிலும் எந்த மாறுதலையும் கொண்டு வருவதில்லை.

அலையோரத்திற்கு மேலே புறம்போக்கிலும், பட்டா நிலத்திலும் கூட IREL மணல் எடுத்திருக்கிறது. ஆனால்,எடுக்கப்பட்ட மணல் (மணலில் மிகக்குறவான அளவே அருமணல் இருக்கும் என்பதால்) மீண்டும் அதே இடத்தில்நிரப்பப்பட்டு மர வளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இல்ல என்று IRELநிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

ஆனால், விவி மினரல் கம்பெனியினர் உள்பகுதிகளில் தென்னந்தோப்புகளையும், கடற்கரையோர மீனவர்பயன்பாட்டு நிலங்களையும், கடலில் மூழ்கியுள்ள நிலங்களையும் தமது சொத்து என்று கூறி மணல் எடுக்கும்நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். மீனவர்களின் கடற்கரையோர நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில்எல்லைக்கல்கள் நட்டுள்ளனர். குமரி மாவட்ட கடற்கரை கடும் அரிப்புக்கு ஆளாகும் பகுதியாகும். அதனைத்தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள செயற்கைத் தடுப்புகள், மீனவர்களின் பயன்பாட்டுக்கான மணல் வெளியைமிகவும் குறைத்துவிட்டன. மீதம் உள்ள மணல் பரப்பை விவி மினரல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்வதேபிரச்சனையின் துவக்கப் புள்ளியாகும்.

சம்பவ தினத்தன்று விவி மினரல் கம்பெனியினர் உள்நாட்டில் வாழும் மக்களின் மத்தியிலிருந்து ஆட்களைத்திரட்டிக்கொண்டு மேல் மிடாலம் கடற்கரைப் புறம்போக்கில் மணல் எடுக்க வந்துள்ளனர். ஏற்கனவே IRELநிறுவனத்தில் மீனவர்கள் மண் அள்ளுவதால், உள்நாட்டு மக்களுக்கு தாங்கள் வேலை தருவதாக உறுதிகூறியுள்ளனர். வேலை கிடக்கும் என்ற கனவில் விவி நிறுவனத்தினருடன் அவர்கள் வந்துள்ளனர். வந்தவர்களுடன்உள்நாட்டுப் பகுதியின் சமூக விரோத சக்திகளும் இருந்துள்ளனர். விவி மினரல் ஆட்கள் கடற்கரையோரத்தில்அல்லாமல் கடலில் கலக்கும் ஓடையின் மணலைத் திரட்டியுள்ளனர். அதாவது அலை இயக்கத்தால் ஈடுசெய்யப்படாத இடத்தில் மணலை அள்ளியுள்ளனர். இந் நடவடிக்கை கடற்கரையின் தற்போதைய கட்டமைப்பைமாற்றும் தன்மை கொண்டதாகும். மேலும் மீனவர் களின் வாழ்வுரிமையைப் பறிப்பது மற்றும் உள்நாட்டுசமூகத்தினருக்கும், மீனவர்களுக்கும் இடையில் சமூகப் பதட்டத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.

மணல் எடுக்க வந்தவர்களை மீனவர்கள் தடுத்துள்ளனர். அப்போது மோதல் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின் போதுவிளவங்கோடு தாசில்தார், குளச்சல் துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் அங்கிருந்திருக்கின்றனர்.மீனவர்கள் திரண்டு வந்தவுடன் வெளியாட்கள் ஓடிப்போய்விட்டனர். அவர்கள் வந்த வாகனங்கள் சிலதாக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக புறம்போக்கில் மதிப்பு வாய்ந்த, கதிரியக்கத் தன்மை கொண்ட மூலகங்களைஅள்ள வந்தவர்களுக்குப் பாகாப்பு கொடுக்க வந்த காவல்துறை, பக்கத்துக் கிராமமான மிடாலத்தைச் சேர்ந்தசம்பவத்தில் சம்பந்தப்படாத ஐந்து பேரைக் கைது செய்துள்ளது.

இவ்வழக்கில் மிடாலம் கிறித்துவ பங்கு பாதிரியாரும் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார். கடற்கரையில் மணல்அள்ளுவதற்கு (கிறித்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள) மீனவர்கள் தடையாக இருந்ததால் பாதிரியார்வழக்கில் இணக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில் ஆச்சரியமென்ன வென்றால், மிக மதிப்பு வாய்ந்த மத்தியஅரசின் லாபகரமான நிறுவனமான IREL ன் உயர் அதிகாரிகளும் இவ்வழக்கில் குற்றவாளிகளாகஇணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.

மணல் எடுப்பதற்காக இக்கம்பெனி முயற்சி செய்யும் இடங்கள் மீனவர்களின் வாழ்வாதார இடங்களாகும். வல்லம்போன்ற படகுகளை நிறுத்துவது, வலைகளையும் மீன்களையும் உலர்த்வது, அருகாமை கிராமங்களுக்குச் சென்றுவருவது போன்ற அவர்கள் வாழ்வின் அன்றாட நடவடிக்கைகள் இம்மணல் பரப்பை நம்பியே உள்ளன. இதனைவேறு காரியங்களுக்காக தனியார் உடைமயாக்குவது 20,000க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வைஅழிப்பதாகும். மேலும், கடற்கரையோர மீனவர்களின் இடப்பெயர்ச்சி கடற்கரையோரமாக மட்டுமே இருக்கமுடியும். குமரி மாவட்ட கடற்கரை நிலைமைகளில் அவர்களை மாற்று இடத்திற்கு அனுப்புவது என்ற பேச்சுக்கேஇடம் இல்ல. எனவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் எந்தவித நடவடிக்கையையும் அனுமதிக்கமுடியாது.

கடற்கரைச் சுற்றுச்சூழல் மாறுதல்களை தாங்கக் கூடியதல்ல. அதில் செய்யப்படுகின்ற சிறு மாறுதலும் மிகப்பெரும்எதிர் விளைவு ஏற்படுத்தும். கடலின் நீர் அழுத்தத்தால் உப்பு நீர் உட்புகாமல் கடற்கரை மணல்தான் தடுக்கிறது.கடற்கரை மணலில் சேகாரம் ஆகும் (மழை, நதி) நன்னீர் அரணாக மாறி உப்பு நீர் உள் நுழைவதைத் தடுக்கிறது.இந்த அரணை அகற்றும் முயற்சி உள்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துவிடும். குமரி மாவட்டக்கடல்பரப்பு மிகுந்த உக்கிரம் கொண்டதாகவும் கரையரிப்பு செய்வதாகவும் இருக்கிறது. எனவே, கடலுக்கும்,கடற்கரையோர மணல் குன்று/ தோட்டங்கள அகற்றுவதும் கடலின் இயக்கப்போக்கை மாற்றி பேரழிவுக்கு இட்டுச்செல்லும். எனவே, கடற்கரையோர மணல் அள்ளுதல் (காற்று அல்லது நீர் செயல்பாட்டால்) ஈடுசெய்ய முடியாதஎல்லையை ஒருபோதும் எட்டக்கூடாது. லாபவெறிகொண்டு தேசத்தின் கதிரியக்க தனிமங்களைக்கொள்ளையடிக்க முயலும் தனியார்கள் இவ்விஷயத்தில் பொறுப்பாக நடந்துகொள்வார்கள் என்பதற்கு எந்தவிதஉத்திரவாதமும் இல்ல.

மத்திய மாநில அரசுகள் இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் மீனவ மக்களின்வாழ்வாதாரத்தையும் இயற்கைச் சுற்றுச் சூழலையும், தேசத்தின் மதிப்பு வாய்ந்த சொத்துக்களைக் காக்க வேண்டும்என்றும் உண்மை அறியும் குழு வலியுறுத்தியுள்ளது. தனியார் கம்பெனியின் நடவடிக்கை உள்நாட்டு மக்களுக்கும்மீனவர்களுக்கும் இடையில் சமூகப் பதட்டத்தை ஏற்படுத்தவதாக இருப்பதையும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.மீனவ மக்கள் ஐவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரியுள்ளது.

உதவியவை: 1) தீக்கதிர் 13.07.2004 2) உண்மை அறியும் குழுவின் அறிக்கை. 3) Brochure published byINDIAN RARE EARTH LTD.

- இ.மதிவாணன்(mathivanan_c@yahoo.com)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X