For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரோல் ஓஜ்திலா.. ஒரு இறை தூதனின் பயணம்

By Staff
Google Oneindia Tamil News
Pope John Paul with Bird
மறைந்த போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பாலின் இயற்பெயர் கரோல் ஓஜ்திலா. இவர் 1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்திலுள்ள வாடோவைஸ்என்ற நகரில் பிறந்தார். இவரது தந்தை கரோல் போலந்து நாட்டு ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றினார்.

Pope John Paul as a childதாயார் எமிலியா ஒரு பள்ளி ஆசிரியை. இவர்களது 2வது மகன் தான் கரோல் ஓஜ்திலா. பள்ளிப் படிப்பை முடித்த இவர், 1939ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார்.அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த போதே ஜகிலோனியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இலக்கியம் மற்றும் தத்துவ இயல் பயின்றார்.

இரண்டாம் உலகப் போர் மூண்ட போது சிறையில் அடைக்கப்படாமல் இருப்பதற்காக இவர், கல் உடைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.

Pope John Paul with Mother Teresa
இதன் பிறகு இவருக்கு இறைப்பணியில் நாட்டம் ஏற்பட்டது. இதனால் கரோல், 1942ம் ஆண்டு கார்க்கோவ் நகரிலுள்ள செமினாரியில் சேர்ந்து படித்தார்.

Pope John Paul with Father1944ம் ஆண்டு படித்து முடித்து பட்டம் பெற்ற இவர், 1946ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி பாதிரியாரானார். இதன் பிறகு மேல் படிப்புக்காக ரோம்சென்றார்.

1956ம் ஆண்டு போலந்திலுள்ள லப்லின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் நீதிநெறித் தலைவராக நியமிக்கப்பட்டார். 1963ம் ஆண்டு கார்க்கோவ்நகரின் ஆர்ச் பிஷப்பாக நியமிக்கப்பட்டார்.

Pope John Paul as a boyஇதையடுத்து சமாதானப் புறாவாக தொண்டாற்றிய ஓஜ்திலா, போலந்து பிஷப்புகளுக்கும், ஜெர்மனி பிஷப்புகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தினார்.

அவர் பயன்படுத்திய புகழ் பெற்ற ஒரு வாக்கியம், ""நாங்கள் மன்னிக்கிறோம். மன்னிக்கும்படி வேண்டுகிறோம் என்பது தான்.

இதன் பிறகு ஓஜ்திலா, போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்ட கர்தினாலாக நியமிக்கப்பட்டார்.

Pope John Paul in 30sஇந் நிலையில் போப் ஆண்டவர் முதலாம் ஜான் பால், பதவியேற்ற 37வது நாளில் மரணமடைந்தார். அவருக்குப் பிறகு புதிய போப்பாக யார் பதவி ஏற்பார்என்று பரபரப்பாக எதிர் பார்க்கப்பட்டது.

போப் ஆண்டவருக்கான தேர்தலில் 120 கர்தினால்கள் ஓட்டுப் போட்டனர். இதில் 103 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்ற ஓஜ்திலா, 263வதுபோப் ஆண்டவராக 1978ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பொறுப்பேற்றார்.

இதன் பிறகு தனது பெயரை இரண்டாம் ஜான் பால் என அறிவித்தார்.

1981ம் ஆண்டு பீட்டர் சதுக்கத்தில் ஆசி வழங்கிக் கொண்டிருந்த போது, போப் ஆண்டவரை துருக்கியை சேர்ந்த ஒரு வாலிபர் துப்பாக்கியால் சுட்டார். இதில்காயமடைந்த போதிலும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Pope John Paul with Childதன்னை துப்பாக்கியால் சுட்ட அந்த வாலிபரை தான் மனப்பூர்வமாக மன்னிப்பதாக போப் ஆண்டவர் அறிவித்தார். அத்தோடு மட்டுமல்லாமல்சிறைக்குச் சென்று அந்த வாலிபரை தனியே சந்தித்துப் பேசி தனது அன்பை பகிர்ந்து கொண்டார்.

சுமார் 27 ஆண்டு காலம் போப்பாண்டவராக இந்த பூமியின் கோடிக்கணக்கான மக்களின் மனங்களை கொள்ளையடித்தார்.

வெள்ளை உடையில் வெள்ளைச் சிரிப்புடன் வலம் வந்த அந்த சமாதானத் தூதர், மதங்களையும் கடந்து மனிதாபிமானம் பரப்பியவர்.

அவரது மறைவு இந்த பூமிப் பந்து சந்தித்த மிகப் பெரும் இழப்புகளும் நிச்சயம் ஒன்று.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X