For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வானமே எல்லை

By Staff
Google Oneindia Tamil News

கருவறையில் இருக்கும் குழந்தைக்கு தாயின் கருப்பை எல்லை. அதன் பிஞ்சுக் கால் தரையில் பட்டவுடன் தாயின்நிழல் கலங்கரை விளக்கம். நடைபயிலும் போது தந்தையின் கைப்பிடியே ஆதாரம். சற்றே வளர்ந்தவுடன் ஆசிரியர்தான் எல்லை. பின் இந்த சமுதாயம் அவன் எல்லை. இதைப் படித்தவுடன் மனிதன் சுதந்திரம் அற்றவன்.எப்பொழுதும் ஏதோ ஒரு எல்லைக்கு உட்பட்டவன் என்று நீங்கள் நினைத்தால் நான் சொல்ல வருவது வேறுநீங்கள் புரிந்து கொண்டது வேறு என்று தொடர்ந்து படித்தால் உங்களுக்குப் புரியும்.

Abraham Lincolnமனிதன் வளர வளர அவனது மனத்திறன், அறிவுத்திறனும் வளர்கிறது. மனத்தின் வளர்ச்சி மனிதனின் வளர்ச்சி.மனத்தின் வளர்ச்சிதான் அவன் வாழ்க்கையின் எல்லையை நிர்ணயிக்கிறது. அப்படிப் பார்த்தால் மனதின்வளர்ச்சிக்கு இதுவரை யாரும் எதுவும் எல்லை விதிக்கவில்லை. அப்படி ஒன்று இருப்பதாகவும் சொல்ல வில்லை.சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் மனித வாழ்க்கையின் எல்லைக்கு ஓர் எல்லை என்பது கிடையாது.குழந்தை தவழ ஆரம்பிக்கும் போது வீட்டின் நான்கு சுவர் தான் அதன் எல்லை. ஆனால் வளர்ந்தபின் வானமேஎல்லை.

வெறும் பேப்பர் போடுவதோடு நிறுத்தியிருந்தால் அந்த தெரு மட்டுமே அந்தச் சிறுவனுக்குஎல்லையாகிப்போயிருக்கும் அல்லது இராமேஸ்வரம் இரயில் நிலையம் எல்லையாகிப் போயிருக்கும். ஆனால்வாழ்க்கையில் இன்று பல பேர் மதிக்கக்கூடிய, நாட்டின் முதல் குடிமகனாக, உயரிய பதவியில் ஏன் அனைவரும்போற்றும் நல்ல மனிதராக நம்மிடையே திரு. அப்துல் கலாம் இருக்கிறார். அவர் தன் வாழ்க்கையை ஒரு குறுகியஎல்லைக்குள் வைக்காமல் மனதையும் அறிவையும் திறந்து வைத்திருந்தார் இன்று நாடு போற்றும் நல்லவராகவாழ்ந்து வருகிறார். தனிமனித வாழ்க்கை மட்டுமில்லாமல் இந்தியாவின் வளர்ச்சிக்கே எல்லையில்லை என்றுமக்களுக்கு புரியவைத்துக் கொண்டிருக்கிறார்.

வெறும் செருப்புத் தைக்கும் கடையின் கல்லாப்பெட்டிதான் தன் வாழ்க்கையின் எல்லை என்று எண்ணியிருந்தால்நாம் ஆபிரஹாம் லிங்கனை இழந்திருப்போம் அல்லவா ?

உதாரணம் என்றால் அப்துல் கலாம், ஆபிரஹாம் லிங்கன் தானா என்று நீங்கள் யோசிக்கிறீர்களா ? நாட்டில்எல்லோருமே ஜனாதிபதி ஆகமுடியாதே என்று உங்கள் மனம் என் மீது கேள்விக் கணைகளை வீசுவதை என்னால்உணர முடிகிறது.

என்னுடைய அடுத்த உதாரணம் ஆச்சரியமான மனிதர். பொறுமைசாலி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றதுடிப்புடையவர். அடுத்தவருக்கு இவரை பிடிக்கிறதோ இல்லையோ, உங்களுக்கு மிகவும் பிடித்தவர். யாரென்றுயோசிக்காதீர்கள். வேறு யாரும் இல்லை. நீங்கள் நீங்களேதான். சில வினாடிகள் உங்கள் வாழ்க்கையில் கடந்துவந்த பாதையை யாருக்கும் தெரியாமல் சற்றே செய்து பாருங்கள். ஏதாவது ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு நிலையில்உங்களின் எல்லை , வளர்ச்சி எப்படி இருந்தது ? இப்போது எப்படியிருக்கிறது. வளர்ச்சி உங்களுக்கே புரியும்.அடைந்த வெற்றி வெளிச்சமிடப்படும். சாதனைகள் சத்தம் போட்டு சிரிக்கும். வாழ்க்கையின் வீர்யம் அதிகமாகும்.தடைகற்களாக இருந்த இடத்தில் உங்களின் வெற்றிக் கொடி பறக்கிறதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

வாழ்வில் சாதனைகள் செய்யவும் போதனைகள் பெறவும் இதுதான் எல்லை என்று எப்போதும் கிடையாது.அடைய வேண்டிய சாதனைகள் கணக்கிலடங்கா. கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகலவு என்பது நிச்சயமானஉண்மை. அறிவுக்கண்ணால் மனதைத் திறந்து வைத்துக் கொண்டு இந்த உலகத்தைப் பார்க்கக் கற்றுக் கொண்டால்ஏராளமான வாய்ப்புகள் வாசற்படி வந்து நிற்கும் என்பது உறுதி. அப்படி உள்ளோர்க்கு வானம் தான் எல்லை.

அடைய வேண்டியவை ஆயிரமிருந்தாலும்

நமக்குள் நாமே அகப்பட்டுக் கொண்டால்

அடைவது என்னவோ அர்த்தமில்லா

ஆதி மனித வாழ்க்கை தான்.

-ராம்குமார் ([email protected])

இவரது முந்தைய படைப்பு:

1.நம்பிக்கை

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X