• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொரீஷியஸ் தமிழர்களின் வீரப் போராட்டம்!

By Staff
|

Murugan statue in Peace park of Mauritiusஅண்மையில் வெளிவந்துள்ள ஏழு புதிய பணத்தாள்களில் தமிழுக்குரிய இடம் மாற்றப்பட்டுள்ளதையொட்டி மொரீஷியசில் வரலாறுகாணாத தமிழர் பேரணிகள் மிகவும் வியக்கத்தக்கதாய் நடைபெற்றன.

2004 அக்டோபர் 30ம் நாள் வெள்ளிக்கிழமை மாலையில், மொரீஷயஸ் மத்திய வங்கி ஆளுநரால் ஏழு புதிய பணத்தாள்கள்வெளியிடப்பட்டன. இந் நிகழ்ச்சியில் அந்நாட்டுத் தலைமை அமைச்சரும் (பிரதமர்), நிதி அமைச்சரும் மற்றும் அரசியல் தலைவர்களும்கலந்து கொண்டனர்.

ஈராயிரம், ஆயிரம், ஐந்நூறு, இரு நூறு, நூறு, ஐம்பது, இருபத்தைந்து ரூபாய் மதிப்புத் தாள்களில் முறையே சிவசாகர், இராம்கூலம், காய்தான்டூவால், விஷ்ணுதயாளு, அகமது, அரங்கநாதன் சீனிவாசன், பாட்சுரோ, ஆச்சூவான் ஆகிய அமரரான அரசியல்வாதிகளின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து பணத்தாள்களில் ஆங்கில மொழிக்குப் பிறகு தமிழ் மொழி இரண்டாவது இடத்தை வகித்து வந்தது.தமிழர்களுடைய குடியேற்றம், பணி, ஒத்துழைப்பு முதலியவற்றைக் கருதியே இவ்வாறு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் செய்தார்கள்.

Mauritius Tamil childஆனால் அண்மையில் தமிழ் மொழி மூன்றாவது இடத்திற்குக் கொண்டு வரப்பட்டதைக் கண்டு தமிழ் மக்கள் பொறுத்துக் கொள்ளாது,ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர். இது தமிழுக்குத் தீங்கு எனக் கருதிப் பல தமிழ்க் குழுக்கள் ஒன்று சேர்ந்து பேரணிகள், கண்டனக்கூட்டங்கள் செய்து வந்தார்கள்.

இந்தப் புதிய தாளில் இரண்டாவது இடத்தில் இந்தி மொழி விளங்குகிறது. தமிழோ, மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. உடனடியாகமனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஒட்டி மீனாட்சியம்மன் திருக்கோவில் பிரகாரத்தில் முக்கிய கூட்டம் கூடியது.

நவம்பர் 8ஆம் நாளில் மோக்காவில் நடைபெற்ற முதல் கண்டனக் கூட்டத்தில் ஏறக்குறைய எண்ணாயிரம் பேர் கலந்து கொண்டனர்.மொரீசியசு தமிழ்க் கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் சிதம்பரம் (பிள்ளை) வரவேற்புரை ஆற்றினார். நாடாளுமன்றஉறுப்பினரான இரு தமிழ் அமைச்சர்களும் எதிர்கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இருவரும் கலந்து கொண்டனர்.

பேரணி மோக்காவை விட்டு பிளாஸா அரங்கின் பிரகாரத்தில் தமிழர் குடியேற்றத்தின் முக்கிய சின்னமாகிய "சிலம்பு என்ற வரலாற்றுக்கற்சிலைக்குச் சென்றது. மத்திய வங்கியின் ஆளுனர் தான்மாராயின் உருவத்தைக் கொளுத்தினார்கள். அங்கு, நம் முன்னோருக்கு அஞ்சலிசெலுத்திக், குழுத்தலைவர்கள் உரையாற்றினார்கள்.

Mauritius new currencyஇரண்டாவது பேரணி பதின்மூன்றாம் நாளன்று "தமிழ் மனசாட்சி என்ற குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் தலைநகரத்தில் நடத்தினார்கள்.நாட்டுப் பெண்மணி தியாகி அஞ்சலை குப்பன் சிலைக்கு மாலை சூட்டி அஞ்சலி செலுத்தினார்கள். இந்தப் பேரணியில் பிற குழுக்களின்தலைவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். மத்திய வங்கியின் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பின்னர் "தமிழ்க் கழகம் சார்பில், ரோசில் நகரத்தில் நடத்திய பெருங் கூட்டத்தில் பல்வேறு இடங்களிலிருந்து ஆண்களும், பெண்களும்கையில் மஞ்சள் கொடி ஏந்தி வந்தனர். பணத்தாளில் ஏற்பட்ட மாற்றத்தைப் பெதும் கண்டித்தனர். அங்கும் எல்லா முக்கியமான குழுக்களின்தலைவர்கள் பேசினார்கள். அரசுக்கு எச்சக்கை விடப்பட்டுள்ளது. சட்டம் மூலமாகப் போராட்டம் தொடரும் என்றனர்.

தமிழர்கள் இந்து என்ற பொதுக் குழுவிலிருந்து விலக வேண்டும். அரசு எல்லா வசதிகளையும் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையைவிடுத்தார்கள்.

Mauritius old currencyதமிழர்ச்சகப் பெருமக்கள் பத்து பேர் குடியரசு தலைவரைச் சந்திக்க விரைந்தனர். துணைக் குடியரசு தலைவரையும் பலர் அணுகிமுறையிட்டார்கள். இந்த நிகழ்ச்சியால் தலைமை அமைச்சர் இராம்குலாம் கலங்கினார்.

நடவடிக்கை எடுக்க முற்பட்டார். புதிய பணத்தாள்களை மறுபடியும் அச்சடிக்குமாறு வங்கி ஆளுநருக்குக் கட்டளையிட்டார். வியாழன்19ஆம் நாள் புதிய தாள்கள் பழைய முறைப்படி (அதாவது தமிழ் இரண்டாவது இடத்தில் வைத்து) அச்சடிக்குமாறு கட்டளையிட்டார்.அடுத்த ஆண்டு சூலை மாதத்துக்குள் இந்தப் பணி முடிக்க வேண்டும் என்று கூறினார் தலைமை அமைச்சர்.

இந்தத் தமிழர் வெற்றி மாபெரும் வெற்றியாகும். சிறுபான்மைத் தமிழர் செய்த முயற்சியால் நாடே கலங்கியது. என்னே நம் இளைஞர்சாதனை!. தமிழன்னையின் மனம் குளிர இந்த நிகழ்ச்சி தமிழர்களிடையே ஒற்றுமை தோற்றுவித்தது மிகவும் போற்றக் கூடியது.

தென் செய்தி(seide@md2.vsnl.net.in)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more