For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ்நாட்டில் தெலுங்கு ஆட்சி மொழி:கொக்கரிக்கும் வெங்கையா

By Staff
Google Oneindia Tamil News

புகழ் பெற்ற மலையாள எழுத்தாளரும், இலக்கிய விமர்சகருமான சுகுமார் ஆழிக்கோடு தமிழர்களுக்கு வழி காட்டியுள்ளார்.

கோழிக்கோடு நகரில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி உணவு விடுதியின் வளாகத்தைத் திறந்துவைக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்ட பிறகும், அம் மாநில முதலமைச்சர் அதைப் புறக்கணித்து விட்டு திறந்துவைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்க புதுமையான வழியை சுகுமார் ஆழிக்கோடு கையாண்டுள்ளார்.

கேரள அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த இலக்கிய விருதான எழுத்தச்சன் விருதை மாநில முதல்வர் உம்மன்சாண்டி தனதுகையால் சுகுமார் ஆழிக்கோடுவுக்கு வழங்கவிருந்தார். ஊழல் பேர்வழிகளுக்குத் துணை போன முதலமைச்சரின் கையால் அந்தவிருதை வழங்க மாட்டேன் என ஆழிக்கோடு துணிவோடு அறிவித்தார்.

புரட்சிகரமான இந்த அறிவிப்பை அவர் வெளியிடும்போது உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவருடன்இருந்தது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலத்தையே இந்த அறிவிப்பு அதிர்ச்சிக்குள்ளாக்கிற்று. எழுத்தாளர் சுகுமார் ஆழிக்கோடு வீட்டிற்கே சென்று அவரிடம்இவ்விருதை நேரில் அளிக்கத் தயாராக இருப்பதாக முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்தார். ஆனாலும் சுகுமார் தன்னுடையநிலையை மாற்றிக் கொள்ளவில்லை.

எழுதுவதோடு எழுத்தாளர்களின் சமூகக் கடமை முடிந்து விடுவதில்லை. சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளையும்,சமூகத்திற்கு எதிரான சட்ட விரோதச் செயல்களையும் எதிர்த்துக் குரல் கொடுக்கவும் போராடவும் முன் வர வேண்டும்.

இந்தக் கடமையை மலையாள எழுத்தாளர் சுகுமார் ஆழிக்கோடு அற்புதமாய்ச் செய்து, அரசு அளிக்க முன் வந்த உயரிய விருதைஏற்க மறுத்து அனைவரின் பாராட்டுதல்களுக்கும் உரியவராயிருக்கிறார்.

கடந்த ஆண்டு சின்னஞ் சிறு மாநிலமான புதுச்சேரியில் தமிழறிஞர்களான முனைவர் திருமுருகனார், முனைவர் ம.இ.லெ. தங்கப்பாஆகியோர் அரசு அளித்திருந்த விருதுகளையும், பரிசுத் தொகையையும் அரசிடமே திருப்பி அளித்த நெஞ்சைக் குலுக்கும் நிகழ்ச்சிநடைபெற்றது.

அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என அரசாணை இருந்தபோதிலும், அது நடைமுறைப்படுத்தாதற்குஎதிர்ப்புத் தெரிவிக்கவே அவர்கள் இவ்வாறு செய்தார்கள்.

மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளைப் பார்த்த பிறகாவது தமிழ்நாட்டு எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், கலைஞர்கள் ஆகியோருக்குஉணர்வு பிறக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ் பயிற்சி மொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாக ஆக்கப்படும் வரைதமிழக அரசு வழங்கும் விருதுகளையோ, பரிசுகளையோ பெற மாட்டோம் என்ற உறுதியை மேற்கொள்ள அவர்கள் முன்வரவேண்டும்.

அந்தத் துணிவும், தியாக உணர்வும் அவர்களுக்கு வருமா?

தலையங்கம், தென் செய்தி.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X