For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிகாகோவில் வைரமுத்துவுக்கு பாராட்டு விழாசிகாகோ:

By Staff
Google Oneindia Tamil News

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவியரசு வைரமுத்துவுக்கு சிகாகோவில் பாராட்டு விழா நடந்தது.அமெரிக்கத் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் இந்த விழா நடத்தப்பட்டது.

Vairamuthuகள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதை வைரமுத்து வென்றார்.

சிகாகோவில் நடந்த பாராட்டு விழாவுக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் ஹர், கனடா நாட்டு பேராசிரியர் பாலன்மேனன், தொழிலதிபர் பால் பாண்டியன், டாக்டர் பஞ்சாட்சரம், அறக்கட்டளைத் தலைவர்மாணிக்கம் ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினர்.

அதில் வைரமுத்து பேசுகையில்,

தமிழ் வேண்டுமானால் மூன்றாக பிரிந்து இயங்கட்டும். தமிழர்கள் பிரிந்து கிடக்க வேண்டாம். கடல்கடந்து வாழும் தமிழர்கள் ஒன்றாகச் செயல்பட்டால் எதையும் வென்று காட்டிட முடியும்.

மேல்நாட்டுக்காரர்கள் இந்தியா வந்தால் எதைக் கண்டு வியக்கிறார்கள் தெரியுமா?.இமயமலையை, கங்கையை, தாஜ்மகாலை, தஞ்சை பெரிய கோவிலைப் பார்த்து அவர்கள்வியப்பதில்லை. அவர்கள் வியப்பதெல்லாம், இந்தியாவின் கட்டுக்குலையாத குடும்பம் என்றகட்டமைப்பைப் பார்த்துத் தான்.

உலக நீரோட்டத்தில் குடும்ப உறவு என்ற நாகரீகத்தை கரைத்துவிடாதீர்கள். பணம் தேடும்வேட்டையில் இருதயம் இறுகிப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உடலையும் மனதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் வெற்றியை நோக்கி விரைகிறான்.உணவு விஷயத்தில் நாக்கு சொல்வதை கேட்காதீர்கள். வயிறு சொல்வதைக் கேளுங்கள்.

உணர்வு விஷயத்தில் மனம் சொல்வதைக் கேட்காதீர்கள். மனசாட்சி சொல்வதைக் கேளுங்கள்.

இந்த நூற்றாண்டின் ஒவ்வொரு வினாடியும் விஞ்ஞானத்தால் உருவாக்கப்படுகிறது. மனித குலம்கனவிலும் கருத முடியாத மாற்றங்களை சந்திக்கப் போகிறது.

தமிழ் செம்மொழியாகப் போகிறது. உலகத் தமிழர்களின் உயரம் இன்னும் அதிகமாகப் போகிறது.ஆனால், செம்மொழி என்பதால் மட்டும் ஒரு மொழி வாழ்ந்துவிடாது.

உலகின் எந்த மூலையில் வசித்தாலும் தாய் மொழியை நேசியுங்கள். தாய் மொழியை நம்புங்கள்.குழந்தைகளோடு தமிழில் உரையாடுங்கள். படைப்பிலக்கியத்தை பரப்புங்கள். மேடைகளில் தமிழில்பேசுங்கள் என்றார் வைரமுத்து.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X