• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராவணனுக்கும் வரலாறு இருக்கு..

By Staff
|

விகடனில் மலையாள எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதியுள்ள மிக அற்புதமானகட்டுரை:

பாலக்காடு மாவட்டத்தில் கூடலூரில் ஒரு எளிய விவசாயக் குடும்பம் என்னுடையது.வீடு எனக்குத் தடையில்லாத சுதந்திரம் தந்தது. மலையாள இலக்கியத்தில்வள்ளத்தோளும், செங்கம் புழாவும், எஸ்கே.பொற்றே காட்டின் எழுத்துக்களையும்நான் அப்பவே படிச்சுட்டேன்.

Vasudevan Nairஎட்டாவது படிக்கும் போது கதை, கவிதை, கட்டுரை என மூணு எழுதி வெவ்வேறுபெயர்களில் பத்திரிகைக்கு அனுப்பிச்சேன். மூணுமே பிச்சுரம் ஆச்சு. எல்லோரும்ஆச்சர்யமாக பாத்தாங்க.

விக்டோரியா கல்லூரியில் பிஎஸ்ஸி முடிச்சுட்டு, ஒரு டுடோரியலில் டீச்சரா இரண்டுவருடம் வேலை பார்த்தேன். அப்புறம் மாத்ரூ பூமியில் நிருபாராகவும்ஆசிரியராகவும் 32 வருஷம் பணிபுரிந்தேன்.

சினிமா அனுபவம்னு நிறையக் கடந்து வந்துட்டேன். ஆனா, பாரதப்பூழா கரைகளில்நான் நடந்து பழகின நாட்கள் தொடங்கி, இன்னைக்கு வரைக்கும் மாறாம இருப்பதுஒண்ணே ஒண்ணுதான். அது எழுதுற ஆர்வம் தான். எழுத்து இல்லைன்னா, இந்தவாசுதேவன் இல்லை.

காலங்காலமாக உருவாக்கி வைத்திருக்கும் மரபுகளை எனது படைப்புகள் மதரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் சிதைக்கிறது என்ற குற்றச்சாட்டு என் மீதுவைக்கப்படுகிறது. ராமனுகுக்கு ஒரு வரலாறு இருக்குன்னா, ராவணனுக்கும் இருக்கும்தானே?

அவன் பக்க நியாயமும், பிரச்சனைகளும் இருக்கும் தானே? ஒரு படைப்பாளியாஎல்லா மனிதர்களின் உணர்வுப் போராட்டங்களையும், உறவுச் சிக்கல்களையும்பார்ப்பது தான் என் படைப்பு.

கண்ணனூர் ஜெயிலில் இருந்த தூக்கு தண்டனைக் கைதி ஒருத்தரைச் சந்திச்சேன்.தன்னோட குழந்தைகளையும், மனைவியையும் கொன்னுட்டு, எத்தனையே வருஷம்ஜெயிலில் இருந்த பிறகும் தான் செஞ்சது தப்புன்னு அவர் ஒப்புக்கவே இல்லை.

சிறை எந்த விதத்திலும் அவரை மாற்றவில்லை. அந்த பாதிப்பில் தான் சிபிமலயில்இயக்கத்தில் சதயம் படத்தை செஞ்சேன். மனிதர்கள் பார்க்கத் தயங்குகிற, பார்க்கமறுக்கிற கறுப்புப் பக்கங்கள் ஒவ்வொரு மனுஷனுக்கும் இருக்கு.

அதை இந்தச் சமூகத்துக்கு வெளிச்சப்படுத்திக் காட்டுவதன் மூலம் மனிதவாழ்க்கையில் பற்றும் நம்பிக்கையும் ஏற்படுத்துவது தான் ஒரு எழுத்தாளனுடையவேலைன்னு நினைக்கிறேன்.

கடந்த முப்பதாண்டுகளில் தமிழக, கேரளா மாநில மக்களின் வாழக்கையிலும் பெரியமாற்றங்கள் நடந்திருக்கு. பொருள் ஈட்ட மலையாளிகள் அரபு நாடுகளுக்குப் போய்கடின உழைப்பால் சம்பாதிச்சு வருவது, அடிப்படையான விவசாயத்தைப்புறக்கணக்கிற சூழ்நிலைக்குத் தள்ளிருச்சு.

அதிவாசிகள் மீதான மலையாளிகளின் பார்வை அருவருப்பானது. ஆதிவாதிகளைஅவங்களோட பூர்வீக நிலத்திலிருந்து அறுத்து எறிஞ்சிருச்சு கேரளத்தின் அதிகாரவர்க்கம். இந்த மலையாள மண்ணின் வளமைக்கு ஆதிவாசிகளின் உழைப்பும்வியர்வையும் இருக்குன்னு புரிஞ்சுக்க மறுப்பது வரலாற்றுக் கொடுமை.

தமிழர்கள், மலையாளிகள்னு ரெண்டு இனமுமே உணர்ச்சிவசப்பட்டநிலையிலிருந்துதான் பிச்சனைகளை அணுகுறாங்க. தமிழர்களுக்கு அவங்க கலாச்சாரவளமைதான் சொத்து. ஒரு மொழிக்காகப் போராடிய இனம்னா அது தமிழினம் தான்.

ஆனா சமீப காலமா ஒருவிதமான கலாச்சார பிற்போக்குத்தனம் தமிழகத்தில் பரவலாகபரவிவருது. உதாரணத்துக்கு குஷ்பு விவகாரத்தைச் சொல்லலாம். குஷ்புவுக்குகோயில் கட்டினவங்களும் தமிழர்கள் தான். துடைப்பத்தோடு அந்தம்மாவை இழிவுபடுத்தியதும் அவங்களேதான்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து இருக்கு. அதைச் சொல்ல அவங்களுக்குஉரிமையும் இருக்கு. அந்த உரிமை குஷ்புவக்கும் உண்டு. என்னைக் கேட்டா,குஷ்புவுக்குக் கோயில் கட்டினது பைத்தியக்காரத்தனம். அவங்களை இழிவுபடுத்தியதுஅதை விட முட்டாள் தனம்.

இம் மாதிரி தொடர்ந்து நடக்கிற சம்பவங்களாைல், தமிழர்கள் பற்றிய தவறானஅபிப்ராயம் பரவி, அதுவே அவங்க அடையாளமா மாறிவிடும் ஆபத்தும் இருக்கு.இன்னைக்கு உலகம் முழுக்க ரெண்டே விஷயங்களுக்குதான் எல்லா பிரச்சனைகளும்நடக்குது.

ஒண்ணு பெட்ரோலுக்கு. இன்னொன்று தண்ணீருக்கு. ஒரு தேசத்துக்குள்ளேயேஎவ்வளவு பிச்சனைகள். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைங்கிறது கேரளா,தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வதாராப் பிரச்சனை.

கேரளத்தில் 44 நதிகள் பாய்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள்கேரளத்துக்கு நல்ல நீராதாரத்தைக் தரும் வரப் பிரசாதமாக இருக்கு. வருஷம் முழுக்கக்கிடைக்கிற தண்ணீரில் 80 சதவீதம் தண்ணீரைச் சேமிக்காமல் வீணடிக்குது கேரளம்.

மலையாளிகள் உண்ணும் அரிசியும், காய்கறியும் அதிகமாக தமிழகத்திலிருந்து தான்வருது. கேரளாவில் இப்போ முழமையான விவசாயம் இல்லை. ரப்பர், தென்னைமாதிரி பணப் பயிர்களைத்தான் விளைவிக்கிறாங்க.

ஆனா தமிழகத்தில் விவசாயம்தான் ஜீவ நாடியாக இருக்கு. காவிரியில் தண்ணீர்வரலைன்னா, விவசாயம் இல்லாமல் போய் தற்கொலை செய்கிற நிலைமைஇருக்குன்னா, விவசாயம் தமிழர்களோட வாழ்வில் கலந்திருக்குன்னு தானே அர்த்தம்.

இப்போ ஆட்சிக்கு வந்திருக்கும் கம்யூனிஸ்ட்டுகள், இந்த விஷயத்தில் இரு மாநிலவிவசாயிகளுக்கும் பாதிப்பு இல்லாத ஒரு நல்ல தீர்வைக் கொடுக்கணும். பாலுமகேந்திரனும், பாரதிராஜாவும் தான் எண்பதுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவைஅழகியலுடனும், மனிதர்களை அவர்களின் சராசரி பரவீனங்களுடனும்அணுகியவர்கள்.

உதிரிப் பூக்கள் மிக மிக அற்புதமான சினிமா. அதே மாதிரி முதல் மரியாதை. புதியபடங்கள் எதையும் நான் பார்க்க வில்லை. அதனால் அதுபற்றி கருத்து சொல்லஇயலாது. ஆனால் ஒன்று படைப்பு, இயக்கம், வாழ்வு, உலகம் எனப் பார்த்தால்,எனக்குப் பழைய நினைவுகள் எவ்வளவு முக்கியமோ, அதே போல புதியகனவுகளும் மிக மிக முக்கியம்.

வருங்காலம் வாழட்டும்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X