• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூவானம்

By Staff
|

முகாமில் வெளிச்சம் குறையத் தொடங்கியிருந்தது. தார் கூரைகளில் காயப் போட்டிருந்த துணிகள் ஒவ்வொன்றாக கீழே விழுந்தபடிஇருந்தன. ஏ புள்ள.. இத எடுக்கலியா... அடிக்கடி கேட்கும் சத்தம் .. இப்போது சத்தம் போட யாரும் இல்லாமல் அந்த இடமே வெறிச்சோடிஇருந்தது.

மழை வரும் முகாந்திரம் வேறு சேர்ந்து கொண்டு, அந்த மாலை நேரத்தையே அழகிலும் அழகானதாக்கிக் கொண்டிருந்தது. அன்றைக்குமுகாமில் எல்லோரும் பக்கத்து கிராமத்துக்குப் போயிருந்தார்கள்.

வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நிவாரணம் என்பதால் அதிகாலையே முகாம் காலியாகி விட்டிருந்தது. இன்னும் கொஞ்சம்தூங்கலாம் என்ற என் ஆசையில் கடுகு அள்ளிப் போட்டது,

எங்கிருந்தோ வந்ததாளிப்பு வாசனை. அப்படியே காலாற நடக்கலாம் என்றுஎழுந்து சோம்பல் முறித்தேன்.

யாரோ என்னைப் பார்ப்பது போல் பட்டது. அவள் மட்டும் அடுப்பு மூட்டி சமைத்துக்

கொண்டிருந்தாள். காற்று வேகம் அதிகமாகியதால்கூரை மேலிருந்த அவளின் உள்ளாடை பறந்து வந்து என் மீது இறங்கியது. நான் அதை விலக்கி நிமிரவும், அவள் பதறிக் கொண்டு ஓடிவரவும் சரியாக இருந்தது.

அய்யோ ... அய்யோ! காத்தடிச்சதாா .. கவனிக்கல.. வேகமாக என் மீதிருந்த துணியை விலக்கி ரொம்பவே வெட்கப்பட்டாள்.

ஏ புள்ள! இத எடுக்கலியா.. அலறியபடியே திரும்ப உள்ளே ஓடி விட்டாள். யாருமே இல்லை என்பது தெரிந்திருந்தும் அவள் சொன்ன ஏபுள்ள எனக்கான பாஷையாகவே பட்டது. மனசுக்குள் ஆயிரம் திசைகளில் நரம்புகள் சிலிர்த்தது. ஓ இவள் மட்டும் போகவில்லையாஎன்ன? யோசனையிலேயே நான் மெல்ல நடந்தேன்.

............

அய்ய, இப்படி வந்திருக்கியே? ஆச்சரியப்பட்டாள்.ம். உன்னப் பார்க்க..என்ன ஆபீசரு அப்படிப் பாக்குதிய!?சும்மா .. யாருக்கு இப்ப சமைக்கிற?இங்கன வேறு யாரு உண்டுஅடஎன் இந்த அட அவளை நிறையவே வெட்கப்பட வைத்தது. அடுப்பைத் தணித்து விட்டு உள்ளே எழுந்து ஓடினாள். மழை வலுக்கத்தொடங்கியது. இன்னிப் பொழுதுக்கு கெளம்புறேன்.

தட்டிக்கு அப்பாலிருந்து சொன்னாள்.

எனக்கு விட்டுப் போக மனசில்லா.. சொல்லும்போதே அவளது குரல் தழுதழுத்தது.

எனக்கும்தான் என்பதை எப்படி அவளிடம் சொல்வது.? பாழாய்ப்போன ஈகோ .. தடுத்தது. என் மவுனத்தை எப்படி மொழி பெயர்ப்பது?மூக்கை உறிஞ்சும் சத்தம்.. கூடவே விசும்பலும் .. நான் எழுந்து உள்ளே சென்றேன். முதல்ல கண்ணைத் துடைச்சுக்க... அவள் முந்தானையைஎடுத்து மெல்லத் துடைத்து விட்டேன். விசும்பல் இன்னும் அதிகமானது. என்னாடா இப்படி அழுதா எனக்கும் சங்கடமில்லையா? எனக்கும்கண்கள் கலங்கியது கண்டு அவளுக்கு தாங்கவே இல்லை.

இன்னும் அதிகமாக என்னை இறுக்கியபடி அழுதாள். யாருமில்லாதது கூட எங்களுக்கு ஒரு விதத்தில் வசதியாக இருந்தது. சற்றைக்கெல்லாம்நான் மீண்டும் அவள் மடியில் குழந்தையாய் .. அடைக்கலமானேன்! அடைமழைக்குப் பின் அடித்த காற்றில் ஈர விறகெல்லாம் மெல்லசூடேறத்

தொடங்கியது.

...........

ஒரு வாய் சாப்பிட ..இல்ல.. போதும்! மனசு நிறைஞ்சிருக்குடகடவுளுக்கு மனசிருந்தா .. சேத்து வெக்கும் திரும்ப அழ ஆரம்பித்தாள்.உன் மனசுல நம்பிக்கை இருந்தா .. நான் திருத்தினேன்.என்னை நன்றியோடு பார்த்தாள்.தாயாய் மாறி என் நெற்றியில் மாறி மாறி முத்தமிட்டாள்.எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு ஒங்கள!பிரிவுக்கு முன் எல்லாக் காதலர்களும் சொல்லிக் கொள்ளும் ஒரே மொழி!! ம்! எனக்கும்.. அவளை சேர்த்தபடியே தூங்கிப் போனேன்.

...........

குளிர்ந்த காற்றினூடே சின்னச் சின்ன தூறல்களும், சேர்ந்து அடுத்த காலை எப்போதும் போல விடியத் தொடங்கியிருந்தது. அவள் போய்விட்டாள் போல. . நான் மெல்ல எழுந்து உட்கார்ந்தேன். கை விரல்களில் மையின் கருமை .. என் மனசுக்குள்ளும் ஒட்டியபடி இருக்க .. அந்தஇடமே வெறிச்சோடி இருந்தது.

முகாமில் வெளிச்சம் படரத் தொடங்கியிருந்தது. தார் கூரைகளில் காயப் போட்டிருந்த துணிகள் எல்லாம் கீழே விழுந்திருக்க, ஏ புள்ள! இதஎடுக்கலியா அடிக்கடி கேட்கும் சத்தம் .. இனி யாரும் இதை சொல்லப் போவதில்லை என்ற நிதர்சனம் உணர்ந்து முதல் முதலாய் நான் தேம்பிஅழ ஆரம்பித்தேன் ... என்னைத் தேற்றிக் கொள்ளும் வகையறியாமல்!!

-வேதா மஹாலஷ்மி(piraati@hotmail.com)

இவரது முந்தைய படைப்புகள்:

1. எல்லாம்தான்....

2. ஜனனம்

3. விளையாட ஒரு பொம்மை

4. மழையில் குடை

5. அறுந்து போன ஒரு இழை

6. முகம்

7. இதுவும் சுகம்

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X