For Daily Alerts
Just In
உசேன் ஓவியம்-10 லட்சம் டாலருக்கு ஏலம்

கொல்கத்தாவில் உள்ள இமாமி சீசல் கலைக் கூடத்தில் நேற்று இந்த ஏலம் நடந்தது. இந்தியாவில் கலைப் படைப்பு ஏலம் விடப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலமாகவும் இந்த ஏலம் நடந்தது. இதில் ஹூசேனின் ஓவியம் 10 லட்சம் டாலருக்கு ஏலம் போனது. இது சாதனை அளவாகும்.
தயீப் மேத்தாவின் காலி ஹி ஓவியம் ரூ. 4.1 கோடிக்கும், ஜே.சுவாமிநாதனின் பேர்ட் அண்ட் மவுன்டைன் ஓவியம் ரூ. 2 கோடிக்கும் ஏலம் போனது.
நேற்று மாலை வரை 70 ஓவியர்களின் 79 ஓவியங்கள் ரூ. 24 கோடி அளவுக்கு ஏலம் போனது.