27 தமிழறிஞர் நூல்கள் நாட்டுடமை

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக சட்டப்பேரவையில், 20.3.2008 அன்று அளிக்கப்பட்ட இவ்வாண்டின் நிதி நிலை அறிக்கையில், தொண்டால் பொழுதளந்த தூய தமிழ்ச் சான்றோர்களின் கருத்துக்களும், சிந்தனைகளும் வளரும் தலைமுறைக்கு மட்டுமின்றி வரும் தலைமுறைகளுக்கும் பயனளிக்கத்தக்க வகையில், தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்கும் திட்டம் தமிழக அரசால், தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வகையில் இதுவரை 67 தமிழறிஞர்களின் நூல்கள் தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த முறை ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் பரிதிமாற் கலைஞர், புலவர் குழந்தை, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் முதலாக 37 தமிழறிஞர்களின் நூல்கள் இதுவரை நாட்டுடமையாக்கப்பட்டு, பரிவுத் தொகையாக 3 கோடியே 9 லட்சம் ரூபாய் அவர்களின் மரபுரிமையர்க்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பெரியசாமித் தூரன், பேராசிரியர் வெள்ளைவாரணனார் உள்ளிட்ட 27 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை, ஆகியவற்றின் அடிப்படையில், அவர் தம் மரபுரிமையர்களுக்குப் பரிவுத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து பெரியசாமித் தூரன், வெள்ளைவாரணனார், பண்டிதர் அயோத்தி தாசர், ஆபிரகாம் பண்டிதர், சதாவதானி செய்குத் தம்பி பாவலர், டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை ஆகிய அறிஞர்களின் நூல்கள் அரசுடமையாக்கப்பட்டு இச்சான்றோர்களின் மரபுரிமையர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம் பரிவுத் தொகை வழங்கப்படும்.
உடுமலை நாராயண கவி, அண்ணல் தங்கோ, அவ்வை டி.கே.சண்முகம், விந்தன், தொ.மு.சி.ரகுநாதன், வல்லிக்கண்ணன், டாக்டர் சஞ்சீவி, கவிஞர் மீரா, சு.சமுத்திரம் உள்ளிட்ட 21 தமிழறிஞர்களின் நூல்கள் அரசுடமையாக்கப்பட்டு இச்சான்றோர்களின் மரபுரிமையர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் பரிவுத் தொகை வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையின் பயனாக நாட்டுடமையாக்கப்படும் படைப்புகளை அளித்துள்ள 27 தமிழறிஞர்களின் மரபுரிமையர்களுக்கு மொத்தம் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications