அபுதாபி-துபாயில் நூல்கள் வெளியீட்டு விழா

இன்று (05.06.08) மாலை GIVE HANDS அமைப்பின் ஆதரவுடனும், நாளை மாலை ஆறு மணிக்கு துபாய் தேரா லேண்ட்மார்க் ஹோட்டலிலும் நூல் வெளியீட்டு விழாக்கள் நடைபெறுகின்றன.
இவ்விழாவில் மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்ட முஹம்மது அலி என்ற ஃபெமினா எழுதிய நாவல்கள் பிறப்பில் பூட்டிய விலங்கு மற்றும் கனவுகளைக் கலைக்காதீர்கள்!,
குவைத் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா தொகுத்தளித்த கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத்தின் கருத்துரைகள், கீழை சீனா தானா எழுதிய மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள்,
பஜிலா ஆசாத் எழுதிய ஏ.பி.சி. மேட் ஈஸி, எம்.எஸ்.எம். அப்துல்லாஹ் எழுதிய பகுத்தறிவின் நீதிமன்றம்,
சரோஜா செல்லத்துரை எழுதிய தாயும் தாய்நாடும், சின்னத்துரை தனபாலா எழுதிய நந்திக் கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும், அரு.சுந்தரம் எழுதிய நகரத்தார் பெருமை உள்ளிட்ட நூல்கள் வெளியிடப்பட இருக்கின்றன.
ஃபெமினா ஏற்கனவே நான்கு நாவல்கள் எழுதியுள்ளார். இவரது நாவல் 'பாலைவனத்தில் ஒரு புல்லாங்குழல்' தமிழக அரசின் சிறப்புப் பரிசைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவிற்கான ஏற்பாடுகள் மணிமேகலைப் பிரசுரம் செய்துள்ளது. தொடர்பு எண் : 050 5277861


Click it and Unblock the Notifications
