கிராமத்தை தத்தெடுக்கும் பல் மருத்துவ சங்கம்
நாமக்கல்: நாமக்கல் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தை தத்தெடுத்து பல் மருத்துவ சேவை அளிக்க இந்திய பல் மருத்துவ சங்கம் முடிவு செய்துள்ளது.
இச்சங்கத்தின் நாமக்கல் கிளை துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
நாமக்கல் நளா ஹோட்டலில் நடந்த விழாவுக்கு இந்திய பல் மருத்துவ சங்க தேசிய தலைவர் டாக்டர் தீபக் கம்தார் தலைமை வகித்தார். கிளையை துவக்கி வைத்து சங்கப் பொதுச் செயலர் டாக்டர் அசோக் தோப்லே பேசியதாவது:
இந்தியாவில் ஆண்டுக்கு 20 ஆயிரம் பல் மருத்துவர்கள் பட்டம் முடித்து வெளியேறுகின்றனர்.
இவர்கள் அனைவரையும் கிராமப்புற மக்களுக்கு சேவையாற்றும் நோக்கிலும், பல் மருத்துவத்தின் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தவும் இந்திய பல் மருத்துவ சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்திலும் அனைத்துப் பகுதிகளிலும் சங்கக் கிளைகள் துவக்கப்பட்டு இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாமக்கல் கிளை சார்பில் வலையப்பட்டி கிராமத்தை தத்தெடுத்து ஒரு மாதம் முழுவதும் அப் பகுதி மக்களுக்கு மருத்துவ உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
சங்க மாநிலத் தலைவர் என்.எஸ். சிவக்குமார், மாநிலச் செயலர் பி. விஜயகுமார், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பல் மருத்துவ பயன்பாடு குறித்து விளக்கிப் பேசினர்.
நாமக்கல் கிளைத் தலைவர் என்.எஸ். லட்சுமி நரசிம்மன், செயலர் எஸ். வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications