சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம்!
டெல்லி: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடு வாழ் இந்தியர் தின விழா சென்னையில் நடைபெற உள்ளது.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இதில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.
தென் ஆப்ரிக்காவில் 20 ஆண்டுகள் வசித்தவர் தேசப்பிதா மகாத்மா காந்தி. அங்கே வெளையர்களால் அவமானத்துக்குள்ளாகி, பின்னர் அங்கே வசிக்கும் இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடி மீட்டுத் தந்துவிட்டு 1915, ஜனவரி, 9ம் தேதி நாடு திரும்பினார்.
இதை நினைவு கூறும் வகையில் கடந்த 2002-ம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் ஜனவரி 9ம் தேதி வெளிநாட்டு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந் நிலையில் ஏழாவது வெளிநாட்டு வாழ் இந்தியர் தின விழாவை, சென்னையில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில், அடுத்தாண்டு ஜனவரி 7 முதல் 9ம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. 8-ம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
9ம் தேதி நடைபெறும் நிறைவு தின விழாவில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கலந்து கொண்டு பேசுகிறார். இவ்விழாவில் பல தலைப்புகளில் கருத்தரங்கங்களும், சிறப்பு கண்காட்சிகளும் நடக்கவுள்ளன.


Click it and Unblock the Notifications
