பகுத்தறிவு வேண்டும்-கனிமொழி!
சென்னை: இளைஞர்கள் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என கவிஞர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழக இளைஞரணி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை கவிஞர் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது:
திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் பேச என்னை அழைத்துள்ளீர்கள். பொதுவாக, மகளிர் அணி மாநாடு, பெண்ணியம், பெண்களும் ஊடகங்களும் என்பது போன்ற கருத்தரங்குகளில் பேசத்தான் பெண்களை அழைப்பார்கள்.
ஆனால் இது பெரியார் பாசறை அல்லவா... இங்குதானே பெண்களுக்கான முக்கியத்துவம் கிடைக்கும்...
இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை 41 சதவீதம். எனவே, நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.
இளைஞர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். கேள்வி கேட்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். கேள்வி கேட்டால்தான் புரட்சி வெடிக்கும். உலகப் புரட்சிகளின் பின்னணி கேள்விகள்தான்.
படிப்பில் சிறந்து விளங்கினாலும் சமூக அக்கறை இல்லாவிட்டால் படித்த படிப்பால் ஒரு பயனும் இல்லை. இளைஞர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணராதவர்களாக இருக்கிறார்கள்.
இன்று மதங்களால்தான் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. மதம் இல்லாவிட்டால் தலிபான் பிரச்சினை இல்லை. சாதிச் சண்டைகள் இல்லை. முன்னேறிய நாடுகளில்கூட மதங்கள் தங்கள் பிரச்சினைகளை அரங்கேற்றி வருகின்றன. மதங்கள் சிந்தனையை மழுங்கடித்துவிடும்.
திராவிட இயக்கங்களால்தான் இடஒதுக்கீடு வந்தது. இடஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் படிக்க முடிந்திருக்கிறது. மருத்துவ கல்லூரிகளில் அதிகளவு சேர்ந்துள்ளனர்.
சமூக மாற்றம் வந்துவிடக்கூடாது என்பதில் சிலர் தெளிவாக இருக்கிறார்கள். இதற்குச் சரியான தீர்வு பெரியாரின் கருத்துகளை இளைஞர்கள் மனதில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றார் கனிமொழி.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications