உலகப் புகழ் பெற்ற மைசூர் தசரா விழா தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

Mysore Palace
மைசூர்: உலகப் புகழ் பெற்ற மைசூரில், நவராத்திரி விழாவான தசரா விழா கோலாகலமாக தொடங்குகிறது. பத்து நாட்களுக்கு இந்த விழா நடைபெறும்.

அசுரனை அழிக்க முப்பெரும் தேவிகளும் இணைந்து தவம் செய்ததே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் நவராத்தரி விழா கொலுவாக கொண்டாடப்படுகிறது. மைசூரில் இது தசரா விழாவாக ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி 10 நாள் தசரா திருவிழா மைசூரில் நாளை கோலகலமாக தொடங்குகிறது. சாமுண்டி மலையில் உள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு சிவக்குமார் ஸ்வாமிகள் பூஜை செய்து தொடங்கி வைக்கிறார்.

தொடக்க விழாவில் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவுக்கு மாநில அரசு ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது.

30ம் தேதி தொடங்கி அக்டோபர் 9ம் தேதி வரை நடக்கிறது.

கடைசி நாளன்று மைசூர் அரண்மனையின் நுழைவாயிலில் தசரா ஊர்வலத்ைத முதல்வர் எடியூரப்பா தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து பன்னிமண்டப மைதானத்தில் பிரமாண்டமான ஒளி அணிவகுப்புடன் தசரா விழா நிறைவு பெறும்.

இந்த ஆண்டு முதல் முதல் முறையாக, தசராவையொட்டி விதம் விதமான விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான தசரா, பெண்கள், குழந்தைகளுக்கான தசரா, வட கர்நாடக மக்களுக்கான தசரா என விதம் விதமாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து மாவட்ட தலைநகரங்கள், தாலுகா தலைநகரங்களில் ஊரக தசராவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+