For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புஷ் மீது வீசப்பட்ட ஷூவுக்கு ரூ.47 கோடி விலை!

By Staff
Google Oneindia Tamil News

Saudi Millionaire to award 1 million to TV reporters Shoe
பாக்தாத்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது நிருபரால் வீசப்பட்ட ஷூவுக்கு ரூ.47 கோடி கொடுக்கத் தயாராக இருப்பதாக சவூதி அரேபிய கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார்.

ஈராக்கில் செய்தியாளர்களுக்கு அதிபர் புஷ் பேட்டி அளித்தபோது அவர் மீது ஒரு தொலைக்காட்சி நிருபர் தனது ஷூவை கழற்றி வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷூ வீசிய அந்த நிருபர் முந்தாஸர் ஒரே இரவில் உலகப் புகழ் பெற்றுவிட்டார்.

அவர் செய்தது சரிதான் என்று பொதுமக்கள் கூறி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட அந்த வாலிபரை விடுதலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி ஈராக் உள்பட பல்வேறு நாடுகளில் போராட்டம் நடக்கிறது.

ஆளுக்கு ஒரு ஷூவை கையில் எடுத்துக்கொண்டு பேரணியாக சென்று ஆங்காங்கே தூணில் ஷூவை தொங்க விடுகிறார்கள். அந்த நிருபருக்கு வீரன் என பட்டம் சூட்டியுள்ளனர்.

அந்த நிருபர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனமும் அறிவித்து விட்டது.

சவூதி அரேபியாவை சேர்ந்த ஒரு கோடீஸ்வரர் புஷ் மீது வீசப்பட்ட அந்த ஷூவை இப்போது விலை கொடுத்து வாங்க முன் வந்துள்ளார்.

'புஷ் மீது வீசப்பட்ட அந்த ஷூவுக்கு ரூ.47 கோடி கொடுக்கத் தயாராக உள்ளேன்' என்று அவர் கூறியதாக சவூதி அரேபிய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இன்னொரு பக்கம், ஷூ வீசிய அந்த வாலிபருக்கு மாவீரன் பட்டம் சூட்டி விருது வழங்கப்போவதாக கூறியிருக்கிறார் லிபியா அதிபர் முகமது கடாபியின் மகள்.

இதற்கிடையே ஷூ வீசிய முந்தாசரை போலீசார் தாக்கியதில் கை உடைந்து பாக்தாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

லெபனான் டி.வி. நிறுவனம் ஒன்று அவருக்கு புதிய வேலை தரவும் முன் வந்துள்ளது.

இதற்கிடையே, ஷூ வீசப்பட்ட வீடியோ படங்கள் ஹிட் ஆகியுள்ளன. இணைய தளங்கள் அனைத்திலுமே கிட்டத்தட்ட இந்த ஷூ வீச்சு விவகாரம்தான் பிரதானமாக உள்ளது.

யு ட்யூப் இணைய தளத்தில் ஏராளமான வீடியோக்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் குறைந்தது 5 லட்சம் ஹிட்டுகளைப் பெற்றுள்ளனவாம்.

ஈ பே நிறுவனம் இந்த ஷூக்களை ஏலம்விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை நீரிழி நோயாளிகள் சங்கத்துக்கு அளிக்க முன் வந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X