தருமபுரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்
{image-Awards-Meet on net250_15092008.jpg tamil.oneindia.com}தருமபுரி: தருமபுரியில் விஜய வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இணையத்தளப் பயிலரங்கு நடைபெற்றது. விஜய வித்தியாலயா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு இதில் பயிற்சி பெற்றனர்.
மருத்துவர் கூத்தரசன் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். தமிழா.காம் நிறுவன உரிமையாளர் முகுந்தராசு அவர்கள் விழாவுக்குத் தலைமையேற்றார்.
புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் தமிழ் இணையத்தளம் உருவாக்கம் குறித்த பயிற்சியை வழங்கினார். இதில் தமிழ்த் தட்டச்சு, தமிழ் 99 விசைப்பலகை, தமிழ் மென்பொருள்கள், மின்னஞ்சல், உரையாடல், பேச்சு பற்றி விரிவாகப் பயிற்சியளித்தார்.
தமிழ் வலைப்பூ உருவாக்கம் பற்றியும் கணக்குத் தொடக்கம், வலைப்பூ வடிவமைப்பு, வெளியிடல், திருத்துதல், படம் இணைத்தல், தமிழ்மணம் பற்றி செயல்விளக்கம் வழி விளக்கினார் முகுந்தராசு.
நிகழ்ச்சிக்கு அதியாமன், தகடூர் உள்ளிட்ட மென்பொருள்களை உருவாக்கிய கோபி மாணவர்களுக்குத் தன் அனுபவங்களை எடுத்துரைத்தார். ஹைதாராபாத்தில் பணிபுரியும் கோபி ஓ.சி.ஆர் எனப்படும் மின்வருடலைப் படிக்கும் தொழில் நுட்பம் பற்றி விளக்கினார்.
சண்முகவடிவேல் நன்றியுரை கூறினார்.
மாலையில் தரும்புரித் தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற சிறப்புரையில் முனைவர் மு.இளங்கோவன் தமிழும் இணையத்தளமும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவருக்கு இணையத் தமிழறிஞர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
முகுந்தராசு, கோபி ஆகியார் பல்வேறு தமிழ் மென்பொருள்களை உருவாக்கியுள்ளமைக்குப் பாராட்டுத் தெரிவித்து தமிழ் மென்பொருளறிஞர் என்னும் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications