சட்டவிரோதமாக யு.எஸ்சில்..ஒபாமா அத்தை-புகலிடம் கிடைக்குமா?

அதிபர் ஒபாமாவின் தந்தையின் ஒன்று விட்ட சகோதரி செய்துனி ஒன்யாங்கோ. கென்யாவைச் சேர்ந்தவர் இவர்.
கென்யாவில் அரசியல் ஸ்திரமின்மை நிலவியதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு வந்தார் ஒன்யாங்கோ. 2001ம் ஆண்டு அவருக்கு அமெரிக்க அரசு சமூக பாதுகாப்பு அட்டையை வழங்கி, அமெரிக்காவில் தங்க அனுமதித்தது.
இதைத் தொடர்ந்து 2002ம் ஆண்டு அவர் அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்தார். ஆனால் இந்தக் கோரிக்கை 2004ம் ஆண்டில் நிராகரிக்கப்பட்டது.
இருப்பினும் கென்யா திரும்பாமல் தொடர்ந்து அமெரிக்காவிலேயே இருந்து வருகிறார் ஒன்யாங்கோ. 2 முறை மீண்டும் புகலிடம் கோரி விண்ணப்பித்தார். ஆனால் அமெரிக்க அரசு அதை நிராகரித்தது. இதையடுத்து அமெரிக்காவிலிருந்து வெளியேறுமாறு 2 முறை அவருக்கு உத்தரவிடப்பட்டது. இருப்பினும் அவர் போகவில்லை.
இதையடுத்து அவர் மீது வழககு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குடியேற்றத் துறை நீதிமன்ற நீதிபதி லியோனார்டு ஷாபிரோ, 2010ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி ஒன்யாங்கோவின் அரசியல் புகலிடம் குறித்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். அதுவரை ஒன்யாங்கோ அமெரிக்காவில் தங்கியிருக்கலாம் எனவும் நீதிபதி அனுமதித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாலர் பென் லபோல்ட் கூறுகையில், இந்த விவகாரத்தில் அதிபர் பாரக் ஒபாமா தலையிடாமல் தள்ளியே இருக்கிறார். சட்டப்படி அனைத்தும் நடைபெற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார் என்றார்.
தெற்கு பாஸ்டனில் ஒன்யாங்கோ வசித்து வருகிறார். தான் குடியிருக்கும் குடியிருப்புப் பகுதியில் சுகாதார ஆலோசகராக அவர் செயல்படுகிறார்.
பாரக் ஒபாமா அதிபராக பதவியேற்ற நிகழ்ச்சிக்கு தனது வக்கீலுடன் சென்று ஒன்யாங்கோ கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications