துபாய் இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் இலவச மருத்துவ முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் இந்தியன் இஸ்லாமிக் சென்டர், அஜ்மான் கல்ஃப் மருத்துவக் கல்லூரி மற்றும் அமீரக செம்பிறைச் சங்கம் ஆகியவை இணைந்து இன்று இலவச மருத்துவ முகாமை கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளியில் நடத்தின.
துபாய் இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் நிர்வாகி பி.டி. அப்துல் ரஹ்மான் தலைமையில் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறப்பு மருத்துவர்கள் பலர் இம்முகாமில் பங்குபெற்று சிறப்பு ஆலோசனைகள் வழங்கினர். ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்டவை இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டன. மருத்துவ சோதனைக்குப் பின்னர் இலவச மருந்துகளும் வினியோகிக்கப்பட்டன.
சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் இம்முகாமின் மூலம் பயன்பெற்றனர். இம்முகாம் தொழிலாளர்கள் பலருக்கும் மிக உதவியாய் இருந்தது.













Click it and Unblock the Notifications