ஜூன் 21ல் கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 17 -வது இந்திய மாங்கனி திருவிழா 21.6.09 அன்று துவங்க உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், முக்கனிகளில் முதன்மையானதும், பழங்களின் அரசன் என்றும் அழைக்கப்படுவதும் மாங்கனியே.
உலக அளவில் 63 நாடுகளில் மா பயிரிடப்படுகிறது. உலக உற்பத்தியில் மாங்கனி 53 சதவீதம் ஆகும்.
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் மா சாகுபடி செய்யப்பட்டு 7 லட்சம் டன் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா சாகுபடிக்கு சாதகமான மண் மற்றும் சீதோஷ்ண நிலை உள்ளதால் 34 ஆயிரம் எக்டேர் நிலத்தில் மா சாகுபடி செய்யப்படுகிறது. எனவே தான் இதை மாங்கனி மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு சுமார் 42 பழக்கூழ் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் சுமார் 2லட்சம் மெட்ரிக் டன் பழங்களை பயன்படுத்தி 50 ஆயிரம் மெட்ரிக் டன் பழக்கூழ் உற்பத்தி செய்யப்படுகிறது.
தோத்தாபுரி என்னும் பெங்களூரா, காதர் என்னும் அல்போன்சா, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, பீதர் என்னும் நடு சாலை, மல்கோவா, ஜகாங்கீர், ஹிமாயுதீன் போன்ற ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றது.
தமிழகத்திலேயே பெருமளவிற்கு மா உற்பத்தியாகும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூன் 21 -ம் தேதி 17 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியும் மா சாகுபடி கருத்தரங்கும் நடைபெற உள்ளது என்றார்.
மாங்கனி ஏற்றுமதி் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி ரூபாய்க்கு மேலாக அந்நிய செலாவணி கிடைக்கிறது. இதன் மூலம், சுமார் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications