திருச்செந்தூரில் ரூ.123 கோடி செலவில் கும்பாபிஷேக பணி
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக பணிகள் ரூ. 123 கோடி செலவில் நடைபெற்று வருவதாக இந்து அறநிலைத்துறை ஆணையர் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் வரும் ஜீலை 2ம் தேதி மகா கும்பாஅபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி ரூ.123 கோடி ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது. இந்த திருப்பணி வேலைகளை ஆய்வு செய்ய தமிழக இந்து அறநிலைத்துறை ஆணையர் சம்பத் திருச்செந்தூர் வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அரசு பொறுப்பேற்ற தமிழகத்தில் ரூ. 242.91 கோடி செலவில் திருப்பணி வேலைகள் முடிவடைந்து 3500 கோயில்களில் கும்பாபிஷேகமும் செய்யப்பட்டுள்ளது.
12 ஆண்டுகள் முடிவுற்ற கோயில்கள் அனைத்தும் முறையாக கண்டறிப்பட்டு கும்பாபிஷகம் நடத்தப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் ஜீலை 2ம் தேதி நடக்கிறது.
கும்பாபிஷேகம் நடப்பதற்கு முதற்கட்டமாக இங்கு நடக்கும் திருப்பணி வேலைகளை தற்போது ஆய்வு செய்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள மற்ற கோயில்களை விட மிகச்சிறந்த முறையில் இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த உள்ளோம்.
தமிழகத்தில் உள்ள 225 கோயில்களில் தேர்களை செப்பணிட ரூ.10 கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது. இதில் 114 கோயில்களில் தேர்கள் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications