தமிழக எல்லை கோயில்-உரிமை கோரும் ஆந்திரம்
வேலூர்: தமிழக எல்லைப் பகுதியிலுள்ள பழமையான கோயிலுக்கு ஆந்திர மாநிலம் உரிமை கோருவதால் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது.
ஆந்திரத்திலிருந்து பாலாறு நுழையும் பகுதியில் புல்லூர் கிராமத்தில் உள்ளது கனக நாச்சியம்மன் கோயில். நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில், அருகிலுள்ள பல கிராமங்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகும்.
குழந்தையில்லாத பெண்கள் பாலாற்றில் குளித்து, இந்தக் கோயிலில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் வருவதால், உண்டியல் வருவாயும் அதிகம்.
இந்நிலையில் கடந்த வாரம் எல்லைப் பகுதி ஆந்திர கிராமங்களைச் சேர்ந்தவர்களும், சில காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளும் இந்தக் கோயிலுக்கு வந்துள்ளனர்.
இந்தக் கோயில் ஆந்திரத்துக்குச் சொந்தமானது எனவும், கோவிலில் இருந்து தமிழக அதிகாரிகள் அனைவரும் வெளியேற வேண்டும் எனவும் அவர்கள் கூறியதாகத் தெரிகிறது.
மேலும் கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கூறியதால் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, வாணியம்பாடியிலிருந்து போலீஸார் விரைந்து வந்து நிலைமையை சமாளித்தனர்.
இந்தப் பகுதியில் இரு மாநில எல்லைகள் தெளிவாகக் குறிக்கப்படாததே இந்தப் பிரச்னைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications