காந்தியின் தெ. ஆப்பிரிக்க வீடு - வாங்க கோல் இந்தியா நிறுவனம் விருப்பம்

இதுகுறித்து கான்பூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்ன விலையாக இருந்தாலும் சரி வீட்டை வாங்குமாறு நிலக்கரித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோல் இந்தியா நிறுவனம் இந்த வீட்டை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளது.
கோல் இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகள் வருகிற 17ம் தேதி ஜோஹன்னஸ்பர்க் சென்று அந்த வீட்டைப் பார்வையிடவுள்ளனர். அவர்களுடன் நானும் செல்லவுள்ளேன்.
ஒருவேளை இந்த வீட்டை இந்திய வம்சாவளியினர் அல்லது வேறு இந்திய நிறுவனம் வாங்க முடிவு செய்திருந்தால், இந்த வீட்டை வாங்கும் முடிவிலிருந்து கோல் இந்தியா பின்வாங்கும்.
தேசத் தந்தை வசித்த வீட்டை நினைவகமாக காக்க வேண்டியது நமது கடமை. இதனால் இத்தகைய முயற்சியை கோல் இந்தியா மேற்கொண்டுள்ளது என்றார்.
மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பரும், பிரபல கட்டடக கலை நிபுணருமான ஹெர்மான் காலென்பாக் இந்த வீட்டை வடிவமைத்துக் கொடுத்தார். முற்றிலும் ஓடுகளால் வேயப்பட்டது இந்த வீடு.
இந்த வீட்டில் 1908-ம் ஆண்டு முதல் 1909-ம் ஆண்டு வரை காந்தி வசித்துள்ளார். இனவெறிக்கெதிராக போராடும் வழக்கறிஞராக அவர் பணியாற்றியபோது இங்கு வசித்தார்.
தற்போது இந்த வீடு நான்சி பால் என்ற பெண்மணியிடம் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக இந்த வீட்டில் வசித்து வருகிறார் நான்சி.
தற்போது கேப்டவுனுக்கு அவர் இடம் பெயரவுள்ளதால் வீட்டை விற்க முடிவு செய்துள்ளார். வீட்டின் விலை 3.5 லட்சம் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதிக விலை என்று கூறி யாரும் வீட்டை வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
சமீபத்தில், இந்த வீட்டை வாங்க காந்தியின் கொள்ளுப்பேத்தியான கீர்த்தி மேனன் ஆர்வம் தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications