அலிப்பூர் பூங்காவில் 8 அரிய வகை குரங்குகள் 'அபேஸ்'
கொல்கத்தா: அலிப்பூர் உயிரியியல் பூங்காவில் இருந்த 8 அரிய பிரேசிலிய குரங்குகள் திருடு போய்விட்டதாக மத்திய உயிரியியல் பூங்கா ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் தெரிவித்துள்ளார்.
காலிதிரிக்ஸ் ஜாக்கஸ் என்ற உயிரியியல் பெயர் கொண்ட அரிய வகை குரங்குகள் பிரேசிலி்ன் வடகிழக்கு பகுதியில் காணப்படுகின்றன. இவற்றில் சில கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் உயிரியியல் பூங்காவில் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் சாம்பல் நிறத்துடன் சுமார் 14 முதல் 18 செமீ உயரம் கொண்ட சிறிய வகை குரங்குகளில் 8 திருடு போய்விட்டதாக மத்திய உயிரியியல் பூங்கா ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் பிஆர் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், பூங்காவில் இருந்த இந்த பிரேசிலிய குரங்குகள் திருடு போனது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் உள்ள பூங்காவில் குரங்கு திருடு போனது இது தான் முதல் முறை. முன்னதாக சில இடங்களில் பாம்புகள் காணாமல் போயிருக்கின்றன.
பூங்காவில் இருப்பவர்களி்ன் உதவியில்லாமல் இந்த திருட்டு நடந்திருக்க முடியாது. தலா 3 ஆண், பெண் மற்றும் 2 குட்டி குரங்குகளை காணவில்லை. பூங்கா அதிகாரிகளிடம் இது குறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார் அவர்.
குரங்கைத் திருடிய 'குரங்கு குப்பனை' பிடிக்க விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications