For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங்-முகம்மத் யூனுசுக்கு யு.எஸ். அதிபரின் சுதந்திர பதக்கம்

By Staff
Google Oneindia Tamil News

Stephen Hawking received US Presidential Medal of Freedom
வாஷிங்டன்: அமெரிக்காவின் மிக உயர்ந்த விருதான அதிபரின் சுதந்திர பதக்கத்தை வானியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங், நோபல் பரிசு வென்ற வங்கதேச வங்கிப் புரட்சியாளர் முகம்மத் யூனுசுக்கு அதிபர் ஒபாமா வழங்கினார்.

அதிபரின் சுதந்திர பதக்கம் கடந்த 1945ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமேனால் அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, உலக அமைதி, கலாச்சார வளர்ச்சி போன்றவற்றுக்கு பாடுபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இந்த பதக்கம் இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங்கிற்கு வழங்கப்பட்டது. தற்போதைய உலகின் ஈடு இணையற்ற வி்ஞ்ஞானியாக கருதப்படும் ஹாகிங்கின் ஏ பிரிப் ஹிஸ்டரி ஆப் டேம் என்ற புத்தகம் மிகவும் பிரபலமானது. அவரால் கை, கால்களை அசைக்கவோ பேசவோ முடியாது. ஆனால், அவர் வீல்ச்சேரில் உட்கார்ந்தபடியே உலகம் மெச்சும் விஞ்ஞானியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டு அவர்களுக்கு பதக்கத்தை வழங்கினார்.

விழாவில் ஒபாமா பேசுகையில்,

ஹாகிங் வீல்ச்சேரில் அமர்ந்தபடியே இந்த அண்டத்தில் வெகு தூரத்துக்கு நம்மை அழைத்து செல்கிறார். தனது அறிவியல் கருத்துக்களால் நமது எண்ணங்களை தூண்டிவிடும் அவர் மனிதனின் மகத்தான எழுச்சியை நம்மை உணரச் செய்துள்ளார் என்றார்.

ஹாகிங்கை தவிர்த்து, சிறுகடன்கள் மூலம் லட்சக்கணக்கான வங்கதேச ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றிய முகம்மத் யூனுஸ், டென்னிஸ் வீராங்கனை பில்லி ஜீன் கிங், தென் ஆப்ரிக்காவின் டேஸ்மான்ட் டூடூ, அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சன் உள்ளிட்ட 15 பேருக்கும் இந்த பதக்கங்களை வழங்கினார் ஒபாமா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X