சிதம்பரம் நடராஜர் கோயில் ரூ.38 கோடியில் புதுப்பிப்பு!

சிதம்பரம் நடராஜர் கோயில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டது. இந்த உண்டியலில் பக்தர்கள் பணம் மற்றும் பலவித காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.
இந் நிலையில், 3 வது முறையாக நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில், ரூ.2 லட்சத்து 23,678 பணம் இருந்தது. மேலும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளின் கரன்சிகளும் இருந்தன.
இந் நிலையில் கோயில் இணை ஆணையர் திருமகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடிநீர் தொட்டியை சீரமைக்கவும், நவலிங்க சன்னதியில் தரைத்தளம் சீரமைக்கவும் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நந்தவனம் மதில்சுவர் சீரமைப்பு பணிக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரமும், உயர் மின்கோபுர விளக்குகள் அமைக்க ரூ.7 லட்சத்து 20 ஆயிரமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், கோயிலை புதுப்பிப்பதற்காக ரூ.38 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும், தமிழக சுற்றுலாத் துறையிடமும் நிதி கோரப்பட்டுள்ளது.
கோயில் வளாகத்தில் கழிவறைகள், குளியல் அறைகள், குடிநீர் வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications