சபாஷ் 'டாக்டர்' கலெக்டர்- இன்ஸ்பெக்டர்!
கோவை: சாலையில் மயங்கி விழுந்த முன்னாள் ராணுவ வீரருக்கு கோவை மாவட்ட கலெக்டரும் உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டரும் முதலுதவி சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காத்தனர்.
சேலம் நீலவரப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுந்தர சாம்பசிவம் (63) ஈசா யோக மையம் செல்ல கோவை வந்தார்.
செஞ்சிலுவைச் சங்கம் அருகிலுள்ள ஜவான்ஸ் பவனில் இருந்து வெளியே வந்த இவர், மயங்கி விழுந்தார். இதில் நெற்றி மற்றும் மூக்கில் இருந்து அவருக்கு ரத்தம் வழிந்தது. வலிப்பும் ஏற்பட்டது.
இதை பொது மக்கள் வேடிக்கை பார்த்தபடியே சென்றனர். அந்த வழியே சென்ற உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அவரை தனது மடியில் கிடத்தியபடி தனியார் மருத்துவமனை ஆம்புலன்சுக்கு போன் செய்தார். இதையடுத்து அங்கு கூட்டம் கூடியது.
அந்த வழியே காரில் சென்ற கோவை கலெக்டரான டாக்டர் உமாநாத் கூட்டத்தைக் கண்டு இறங்கி வந்தார். அவர் எம்பிபிஎஸ் டாக்டர் என்பதால், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
இதையடுத்து சுந்தர சாம்பசிவம் மயக்கம் தெளிந்தார். ஆம்புலன்ஸ் வந்துவிடவே, அவரை அதில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு அவரது அடையாள அட்டையை வைத்து அவரது மனைவிக்கு தகவலும் தந்தனர் கலெக்டரும் இன்ஸ்பெக்டரும்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications