மலேசியாவில் 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு

28ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் இயக்குனர் வா.மு.சே.திருவள்ளுவர் மற்றும் மாநாட்டு வழிநடத்தும் குழு உறுப்பினர்கள் இலக்குவனார் திருவள்ளுவர், செம்பை சேவியர், தேவதாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் சார்பில் இதுவரை 5 மாநாடுகள் திருச்சி, சென்னை, ஜெர்மனி, பாங்காக், மதுரை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. 6-வது மாநாடு மலேசியாவில் 4 நாட்கள் நடத்தப்படுகிறது.
சென்னை, திருச்சி உள்பட பல பகுதிகளில் இருந்து தமிழறிஞர்கள் 60 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இருந்து பெருந்திரளாக தமிழ் மக்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25-ந் தேதி மாநாட்டின் முதல் நாளில் பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் வா.மு.சேதுராமன் வரவேற்புரை நிகழ்த்துவார். மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசிய தலைவர் டத்தோ சாமிவேலு, மலேசியா பிரதமர் அலுவலக அமைச்சர் சூ கூன் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பேசுவார்கள்.
2-ம் நாளில் தமிழ் மற்றும் தமிழர் பற்றி பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர். ஈழத் தமிழர்கள் உள்பட உலகின் பல இடங்களில் வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு பற்றியும் இந்த மாநாட்டில் பேசப்படும். இந்தத் தலைப்பில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி உரையாற்றுவார்.
இந்த மாநாட்டில் அண்ணா நூற்றாண்டு கவியரங்கம் நடத்தப்பட உள்ளது. அண்ணா பற்றிய கவிதைகளை கவிஞர்கள் பாட உள்ளனர்.
நிறைவு விழாவில் பன்னாட்டு தமிழுறவு தகவல் தொடர்பு நூல் வெளியிடப்படுகிறது. இதை இ.சி.ஐ. திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் வெளியிட, முதல் பிரதியை சக்கர இந்து புத்த தர்ம தேரோ சாமிகள் பெற்றுக் கொள்வார். உலகில் உள்ள அனைத்து தமிழறிஞர்களின் இ.மெயில் முகவரிகள் இந்தப் புத்தகத்தில் தொகுத்து தரப்பட்டு உள்ளது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராஜேந்திரன் மாநாட்டு நிறைவுரை ஆற்றுவார்.
மாநாட்டுக்கு முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் க.அன்பழகன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் உள்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதும், உலகத் தமிழர்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமை வளர வேண்டும் என்பதும்தான் இந்த மாநாட்டின் நோக்கம் என்று தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications