பொருளாதார மந்த நிலை - அரசு சொத்துக்களை விற்க பிரிட்டன் முடிவு
லண்டன்: பொருளாதார சீர்குலைவால் தள்ளாடி வரும் இங்கிலாந்து அரசு அதை சமாளிக்க அரசு சொத்துக்கள் சிலவற்றை விற்க முடிவு செய்திருப்பதாக பிரதமர் கார்டன் பிரவுன் கூறியுள்ளார்.
இந்த சொத்துக்களை விற்று கடன்களைக் குறைக்க இங்கிலாந்து அரசு தீர்மானித்துள்ளதாம்.
25.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அரசு சொத்துக்களை விற்கப் போகிறதாம் இங்கிலாந்து.
பிரிட்டனையும், பிரான்ஸையும் இணைக்கும் சுரங்கப் பாதை உள்ளிட்டவை இந்த விற்பனைப் பட்டியலில் அடங்கியுள்ளனவாம்.
ஐரோப்பிய யுரேனியம் நிறுவனமான யுரேன்கோவில் உள்ள இங்கிலாந்து அரசின் 33 சதவீத பங்குகள், டார்ட்போட்டில் உள்ள தேம்ஸ் நதியின் மீது உள்ள பாலம், ஸ்டூடன்ஸ் லோன் கம்பெனி உள்ளிட்டவையும் விற்பனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக பிரவுன் கூறியுள்ளார்.
அடுத்த நான்கு ஆண்டுகளில் இங்கிலாந்தின் நிதிப் பற்றாக்குறையைப் பாதியாகக் குறைக்கவும் பிரவுன் திட்டமிட்டுள்ளார்.
உலகையே கட்டி ஆண்ட இங்கிலாந்துக்கு இப்போது சொத்தை விற்கும் நிலைமை.












Click it and Unblock the Notifications