திருச்செந்தூர் சூரசம்ஹாரம் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

இதேபோல, வட பழனி, கந்தகோட்டம் உளளிட்ட கோவில்களிலும் சூரசம்ஹாரம் நடந்தது.
கந்த சஷ்டியின் உச்ச கட்டமான சூரசம்ஹாரம் திருச்செந்தூர் உள்பட முருகன் கோவில்களில் நேற்று மாலை நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 18ம் தேதி தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நேற்று மாலை கோயில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதையொட்டி நேற்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பாரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் மாலை 4.30 மணிக்கு கோயில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சூரனை வதம் செய்து ஆணவம் அழியும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்திய சூரசம்ஹார விழா தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்து பரவசம் அடைந்தனர். அரோஹரா கோஷம் விண்ணைப் பிளந்தது.
சூரசம்ஹாரத்திற்குப் பின்னர் 6 நாட்களும் கடும் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் கடலில் நீராடி பானகம் அருந்தி விரதத்தை நிறைவு செய்தனர். இரவு 108 மகாதேவர் சன்னதியில் சாயாபிஷேகம் எனப்படும் நிழல் அபிஷேகம் நடைபெற்றது.
வடபழனி முருகன் கோவிலில் தெற்கு கோபுர வாசலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவையொட்டி நேற்று அதிகாலையில் முருகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. மதியம் 12 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு பெற்றது. மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற்றது.
சூரசம்ஹார நிகழ்ச்சி சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. முடிவில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்டு முருகனை தரிசிப்பதற்காக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடபழனிக்கு வந்திருந்தனர்.
இதேபோல பூங்காநகர் கந்தகோட்டம் கந்தசாமி கோவிலிலும் சூர சம்ஹார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications