ஆப்பிள் உற்பத்தியில் தொடர் சரிவு- புவி வெப்ப மாற்றம் காரணமா?

இந்திய ஆப்பிள் உற்பத்தியில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவது இமாச்சல பிரதேசமும், ஜம்மு காஷ்மீரும் தான். இதில் நாட்டின் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இமாச்சல பிரதேசத்தில் நடக்கிறது.
சிம்லா, குலு, சோலான், கினுவார் மாவட்டங்களில் ஆப்பிள் மகசூல் அதிகளவில் கிடைக்கும். அப்பகுதியில் பிரதான பயிரும் இதுவே. நல்ல விளைச்சல் இருந்தால், இப்பகுதிகளில் இருந்து மட்டும் ரூ.15 பில்லியனுக்கு ஆப்பிள் கொள்முதல் செய்யப்படும்.
இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் ஆப்பிள் உற்பத்தி படிப்படியாக சரிந்து வருவதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த 2007-08ம் ஆண்டில் மொத்தம் 2.96 கோடி பெட்டிகள் (ஒரு பெட்டியில் 20 முதல் 22 கிலோ) ஆப்பிள்கள் உற்பத்தியாயின. இதையடுத்து 2008-09ம் ஆண்டில் 2.55 கோடியாக குறைந்தது. 2009-10ல் 1.40 கோடி பெட்டிகளை தாண்டுவதற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலை உள்ளது.
இவ்வாறு ஆப்பிள் உற்பத்தி குறைவதற்கு புவிவெப்பம் அதிகரிப்பது தான் அடிப்படை காரணம் என்று சுற்றுச்சூழல் வி்ஞ்ஞானிகள் கூறுகின்றனர். புவி வெப்ப உயர்வால், குளிர்கால பனிப்பொழிவு குறைகிறது. இதனால் ஆப்பிள் வளர்ச்சிக்கு உகந்த கிடைக்காமல் உற்பத்தி பாதிக்கிறது என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மாநிலத்தின் ஆப்பிள் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் லேக் ராஜ் சவுஹான் கூறுகையில், 'குளிரோடு கூடிய நல்ல பனிப்பொழிவு இருந்தால் தான் ஆப்பிள் நன்கு வளரும். கடந்த ஆண்டுகளில் கைவிட்டுப்போன மகசூல் இப்போது கிடைக்குமா என எதிர்பார்த்தோம். ஆனால் இந்த முறை நிலைமை மிக மோசமாக உள்ளது.
'ஆப்பிள் உற்பத்தி பாதிப்பு பற்றி ஆராய மாநில அரசு விஞ்ஞானிகள் குழுவை அமைத்தது. புவி வெப்ப மாற்றத்தால் தான் ஆப்பிள் உற்பத்தி பாதிப்பதாக ஆவர்கள் கூறுகின்றனர். ஒரு காலத்தில் ஆப்பிளில் பணப்பயிராக இருந்தது. இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டது' என்றார்.
இதேபோல் ஜப்பானிலும் ஆப்பிள் உற்பத்தி சரிவு கண்டு வருகிறது. அங்கு தற்போது ஆப்பிள் வளரும் பிரதேசங்களில் பெரும்பாலானவை 2060ம் ஆண்டு வாக்கில் ஆப்பிள் வளர லாயக்கில்லாத பகுதியாக மாறிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புவிவெப்ப அதிகரிப்பு காரணமாக, ஆப்பிளுக்குத் தேவையான 6 முதல் 14 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பநிலையை அப்பகுதிகள் இழக்க நேரிடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications