திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா - நவ. 22ல் தொடக்கம்
திருவண்ணாமலை: திருவண்ணாமையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் வருகிற நவம்பர் 22ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி டிசம்பர் 1ம் தேதி மாலை நடைபெறுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தீபத்திருவிழா நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.
அன்று அதிகாலை 4.15 மணிக்கு கோயிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து, 23ம் தேதி இந்திர விமானம், 24ம் தேதி அன்ன வாகனம், 25ம் தேதி காமதேனு வாகனம், 26ம் தேதி ரிஷப வாகனம் ஆகிவற்றில் சுவாமி மாட வீதியில் பவனி வருவார்.
27ல் தேரோட்டம்...
27ம் தேதி வெள்ளித் தேரோட்டம் நடைபெறும். 28ம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும்.
29ம் தேதி பிச்சாண்டவர் உற்சவமும், 30ம் தேதி காமதேனு வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும்.
டிசம்பர் 1ல் மகா தீபம்...
முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி டிசம்பர் 1ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, 3 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெறும்.












Click it and Unblock the Notifications