அமீரக தமிழர்களின் தமிழரங்கம் 2010!
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் சார்பில்
வரும் 12ம் தேதி 'தமிழரங்கம்-2010" என்ற நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இவ்விழாவில் கவிஞர் கனிமொழி எம்.பி, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தி.க தலைவர் கி.வீரமணி, ஈடிஏ அஸ்கான் குழும மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும், நாகை எம்.பி ஏ.கே.எஸ். விஜயன், திரைப்பட நடிகர் பசுபதி, அன்பு மருத்துவமனை நிறுவனர் குடந்தை அன்பழகன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
பிரபல திரை நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சிகளும், பின்னனி பாடகர்கள் பங்குபெறும்
இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்க இலவச அனுமதிச் சீட்டு பெற 050-4557513 / 050 697 3502 / 050 56 46267 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications