கொடைக்கானல் மருத்துவமனையில் இலவச பிளாஸ்டிக் சர்ஜரி
சென்னை: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பாசம் மருத்துவமனையில் இலவச பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.
தீக்காயம் பட்டதாலோ அல்லது பிறந்தது முதலோ காது, முகம், மூக்கு, வாய் உள்ளிட்டவற்றில் பாதிப்பு உள்ளோருக்கு இங்கு இலவசமாக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்து குணமாக்கப்படவுள்ளது.
போக்குவரத்துச் செலவு மற்றும் உணவுக்கான செலவை மட்டும் நோயாளிகள் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி சிகிச்சை அனைத்தும் இலவசமாகவே அளிக்கப்படும்.
இந்த முகாமில் ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர்கள் குழு கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
முகாமுக்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரம் அறிய விரும்புவோர் கீழ்க்காணும் முகவரி அல்லது தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
பாசம் மருத்துவமனை, கொடைக்கானல்.
தொலைபேசி எண்கள் - 04542 - 240778 (மருத்துவமனை), 240668, 245732.












Click it and Unblock the Notifications