12 சீடர்களுடன் கூடிய இயேசுநாதரின் சொரூபம் கண்டுபிடிப்பு
கன்னியாகுமரி: 12 சீடர்களை உள்ளடங்கிய இயேசு நாதரின் கை சொரூபம் நேற்று கன்னியாகுமரி கடலில் கண்டெடுக்கபபட்டது.
அந்தோனியர் குருசடியில் வைக்கப்பட்டுள்ள அந்த சொரூபத்தை ஏராளமான மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபித்து செல்கின்றனர்.
கன்னியாகுமரி அந்தோணியர் தெருவை சேர்ந்தவர் ராயப்பன். மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ஜெய்வந்த். கன்னியாகுமரியில் உள்ள பள்ளி ஓன்றில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஜெய்வந்த் பள்ளி செல்லும் நாட்கள் போக மற்ற நாட்களில் கடற்கரை பகுதிகளில் சிப்பி மற்றும் சங்குகள் எடுப்பது வழக்கம். நேற்றும் வழக்கம்போல் அப்பகுதி கடற்கரையில் சங்கு எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது கடலில் உள்ள பாறை ஓன்றில் கனமான பொருள் ஓன்று தென்பட அதனை எடுத்தார். ஆனால் சிறுவன் ஜெய்வந்த்தால் அதனை தூக்க முடியவில்லை. இதனால் தன் தாய் உதவியுடன் அதனை எடுக்க முடிவு செய்தார்.
இதுகுறித்து அவர் தாயாரிடம் கூற அவர் கடலுக்குள் இறங்கி ஜெபம் செய்து அந்த பொருளை எடுத்தார். அது இயேசு நாதரின் கை சொரூபமாக இருந்தது.
இயேசு நாதரின் கை சொரூபத்துக்குள் 12 சீடர்கள் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. கை சொரூபத்தை அப்பகுதி மக்கள் அந்தோணியர் குருசடியில் வைத்து வழிபட துவங்கியுள்ளனர்.
12 சீடர்கள் பொறிக்கப்பட்ட அதிசய இயேசுநாதரின் கை சொரூபம் கடலில் கிடைத்த தகவல் அப்பகுதியில் பரவியதை அடுத்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்று வழிபட்டு வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications