For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நன்மை பிறந்த நாள் தான் தீபாவளி!

By Chakra
Google Oneindia Tamil News

Diwali
தீபாவளி பிறந்தது எப்படி என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதைப் பற்றிப் பார்ப்போம்.

மகா விஷ்ணு, கிருஷ்ண பகவான், ராம பிரான் ஆகியோரை நினைத்து பின்பற்றப்படும் பண்டிகைதான் தீபாவளி என்பது ஒரு கருத்து. தன் தந்தையின் கட்டளைப்படி 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார் ராமபிரான். சீதையை அபகரித்த ராவணனை அவர் இலங்கை சென்று வதம் செய்து அழித்தார். அதையடுத்தே, தீயவர்கள் அழிந்து உலகுக்கு நல்ல நாள் பிறந்தது என்பதை நினைவூட்டும் நாளாக தீபாவளி கருதப்படுகிறது.

ராவணனிடம் இருந்து சீதையை மீட்ட ராமர் அயோத்திக்குத் திரும்பிய நாளை அந்த நாட்டு மக்கள் தீபாவளியாகக் கொண்டாட, அதுவே காலம் காலமாக பின்பற்றப்பட்டு வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

14 ஆண்டுகளாக தீபாவளியை மறந்திருந்த அயத்தி மக்கள், ராமராஜ்யத்தில் மகிழ்ச்சியுடன் விளங்கினர். அதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் 17 நாட்கள் தீபாவளியைக் கொண்டாடினர் என்றும் கூறப்படுகிறது.

மகாபலி மன்னனின் கொட்டத்தை அடக்க, அவனின் அட்டூழியங்களை முடிவுக்குக் கொண்டு வர வாமன அவதாரத்தில் வந்த மாக விஷ்ணு, மகாபலியை அழித்து மூவுலகையும் தன் காலின் கீழ் கொண்டு வந்தார். மகாபலி அழிந்தநாள், தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

மூவுலகையும் அச்சுற்த்தி வந்த நரகாசுரனை, கிருஷ்ண பரமாத்மா அழித்த நாள் தீபாவளி என்றும் கூறப்படுகிறது. கொடுமைக்கார நககாசுரனின் பிடியில் இருந்து தப்பிய மக்கள் ஆண்டுதோறும் இந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

இந்திரனை ஒடுக்க கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்த கிருஷ்ணர், மழை, வெள்ளத்திலிருந்து ஏழைகளைக் காத்தார். அந்த நாளை தீபாவளிக்கு மதறுநாள் நினைவு கூறுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு இந்து மத புராணங்களில், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த குடும்பத்தினரும் இணக்கமாக, நண்பர்கள், உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்வதுதான் தீபாவளி. அதற்கேற்பவே இந்த நாளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். புத்தாடைகள், பலகாரங்கள், பட்டாசுகள், லட்சுமி பூஜை என்று ஒரே நாளில் பலவித மகிழ்ச்சிகள். இந்த மகிழ்ச்சியை அண்டை அயலாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வகுக்கப்பட்டதுதான் தீபாவளி.

தீபாவளியின் ஒரு நாள், சகோதர பாசத்தை வளர்ப்பதற்கான, சகோதரிகளை நினைவு கூறுவதற்கான நாளாகக் கருதப்படுகிறது. நமது ரத்த சம்பந்தம் கொண்ட பெண் உறவு, வேறு ஒரு வீட்டில் குடியேறியிருக்கிறாள். அவள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினாளா? மகிழ்ச்சியாக இருந்தாளா? என்பதை அண்ணன், தமபிகள் சென்று ஆராயும் நாள் உள்ளது.

அது, தீபாவளி முடிந்த இரண்டாவது நாள், தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், பலகாரங்களை வாங்கிக் கொண்டு, சகோதரி வீட்டுக்குச் சென்று அவளின் தீபாவளி கொண்டாட்டம் பள்றி சகோதாரன் கேட்கிறான். சகோதரியும், தன் வீட்டில் தீபாவளி கொண்டாடப்பட்ட விதத்தை விளக்குகிறாள். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறான் சகோதரன். சகோதர பாசத்தை மேம்படுத்த இதை விடச் சிறந்த விழா, நிகழ்ச்சி வேறு எதுவும் இருக்கவா செய்யும்?

தன் வீட்டில் எத்தனையோ பண்டங்களையும், பலகாரங்களையும் செய்தவள்தான் அந்தப் பெண். இருந்தாலும், தன் தாய்வீட்டிலிருந்து வந்த பண்டங்களை ஆசையுடன் அவள் சாப்பிடும்போது, தன் தாய் வீட்டு நினைவு அவருக்கு வரும். சிறு வயதில் தன் தாய்வீட்டில் சகோதரர்களுடன் தீபாவளியை கொண்டாடியது அவள் நினைவில் வந்து போகும். அந்த நினைவோடு, அந்தப் பண்டங்களைச் சாப்பிடும் போது, அந்தப் பண்டங்கள் அந்தப் பெண்ணுக்கு தேவாமிர்தமாக இருக்கும்.

காரணம் எதுவோ, உண்மை எதுவோ, தீபாவளி என்பது குடும்பத்துடன் குதூகலமாக கொண்டாடும் பண்டிகை என்பதில் சந்தேகம் இல்லை. எனவே இதை சந்தோஷத்துடன் அனுபவிப்போம்.

தீபாவளியை குதூகலமாய் கொண்டாடுங்கள்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X