சித்ரா பவுர்ணமி - தாயார் பாதத்திற்கு செல்ல வனத்துறையினர் திடீர் தடை
களக்காடு: நாளை சித்ரா பவுர்ணமியை ஒட்டி திருக்குருங்குடி மலையில் உள்ள தாயார் பாதத்திற்கு செல்ல வனத்துறையினர் திடீர் தடை விதித்துள்ளனர்.
களக்காடு அருகே உள்ள திருக்குருங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் திருமலைநம்பி கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் தாயார் பாலம் என்ற இடம் உள்ளது. இங்குள்ள பாறையில் பாதம் போன்ற வடிவிலான அமைப்பு உள்ளது.
திருக்குருங்குடி மலையில் சித்தர்கள் இன்றும் வாழ்வதாக கருதப்படுகிறது. அவர்கள் இந்த பாதத்திற்கு பூஜைகள் செய்வதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இங்கு செல்ல காட்டுக்குள் ஓற்றையடி பாதை மட்டுமே உள்ளது.
ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி அன்று சென்னை, திருச்சி மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் இங்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் நாளை 28ம் தேதி சித்ரா பவுர்ணமி கொண்டாடப்படும் நிலையில் தாயார் பாதத்திற்கு செல்ல வனத்துறை திடீர் தடை விதித்துள்ளது. இதுகுறித்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் பத்ரசாமி கூறுகையில், வனத்தின் நலன் கருதியும், வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதியும் சென்னை தலைமை வன பாதுகாவலர் உத்தரவுபடி தாயார் பாதத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் தற்போது நீரோடைகள் காய்ந்து வறட்சி ஏற்பட்டுள்ளதும் தடை விதிப்பதற்கு ஒரு காரணமாகும். கொடுமுடியாறு அணை பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாமியார் பாதத்திற்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுளளது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications