கன்னியாகுமரி காளிமலை கோயிலில் ஒரு லட்சம் பொங்கல் வழிபாடு
குலசேகரம்: காளிமலையில் இன்று சித்திரை பவுர்ணமி தினத்தில் ஒரு லட்சம் பொங்கல் வழிபாடு நடக்கிறது.
கன்னியாகுமரி, மண்டைக்காடு, கொல்லங்கோடு, காளிமலை ஆகிய நான்கு சக்தி தலங்களில் ஓன்றாக திகழ்கிறது காளிமலை. காளிமலை, கொண்டைகட்டி, கூனிச்சி, வரும்பொதி ஆகிய மூன்று மலைகள் ஒருங்கே அமையப்பெற்ற இந்த புண்ணிய மலையில் தூர்க்கா தேவி, தர்மசாஸ்தா, நாகயக்ஷி எழுந்தருளி அருள் பலிக்கின்றனர்.
அகஸ்திய முனிவர் தவம் செய்து மூம்மூர்த்திகளின் தரிசனம் கிடைத்த பெருமை இந்த மலைக்கு உண்டு. மார்த்தாண்ட வர்மராஜா எட்டு வீட்டு பிள்ளைமார்களால் துரத்தப்பட்ட போது இந்த மலையில் அருள் பாலிக்கும் காளிதேவி அருளால் காப்பாற்றப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
வாழ்வளிக்க வரம்பொதி சாஸ்தாவும், துயர்துடைக்க காளிதேவியும், இன்பமளிக்க நாகராஜாவும், தாங்கி நிற்க நெடுத்தனையும், வரமருள கொண்டைக்கட்டி சிவனும், எல்லை தேவதைகளும், தேவ விருட்சங்களும் நிறைந்த தெய்வீக மலையில் பொங்கல் வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.
காளிதீர்த்தத்தில் நீராடி வழிபடும் பக்தர்கள் துயர்துடைத்து மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. கடல் மட்டத்தில் இருந்து 200 அடிக்கு மேல் மலையில் ஒரு லட்சம் பொங்கல் படைத்து சாதனை படைக்கிறது காளிமலை கோயில். இன்று காலை நிர்மல்யம், அலங்காரபூஜை, அஷ்டதிரவிய மஹா கணபதி ஹோமம், உஷ பூஜை, எதிர்த்த பூஜை, நடந்தது. காலை 9.30 மணிக்கு கூட்டு பொங்கல் தொடர்ந்து, பொங்கல் நிவேத்யம், உச்சகால பூஜை, மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications