தொல்காப்பியரின் காலம் கி.மு. 711
காரைக்குடி: தொல்காப்பியரின் காலம் கி.மு. 711 என்று சிவகங்கை மாவட்டம் கோவிலூர் திருமடத்தில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவிலூர் திருமடமும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்திய தொல்காப்பியர் கால ஆராய்ச்சிக் கருத்தரங்கை நடத்தின.
தொல்காப்பியரது காலம் பற்றி பல ஆண்டுகளாக தமிழறிஞர்கள் மத்தியில் இருவேறு கருத்துகள் இருந்து வந்தன. அவரது காலம் குறித்து பல்வேறு ஆய்வுக் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன.
கடந்த மூன்று ஆண்டுகளாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்திய முப்பதுக்கும் மேற்பட்ட தொல்காப்பியக் கருத்தரங்கங்களில் தொல்காப்பியரின் காலத்தையும் நாளையும் வரையறை செய்துள்ளனர்.
கோவிலூர் திருமடத்தில் மூன்று நாள்கள் நிகழ்ந்த திருவள்ளுவர் ஆண்டு கருத்தரங்கில், அறிஞர் பலரால் ஆய்வு செய்யப்பட்டு, தொல்காப்பியர் நாளும், கால எல்லையும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சித்திரைத் திங்கள் முழுமதி நாள் "சித்திராப் பெÜர்ணமி' என்றும் அவரது கால எல்லை கி.மு. 711 (ஆண்டு 2721) என்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், புதன்கிழமை மாலை அதங்கோட்டாசான் இருக்கை, ரோட்டரி அரங்கம் மேல்தளத்தில், தொல்காப்பியர் தமிழ்ப் பெருவிழா நடைபெறுகிறது.
தொல்காப்பியர் கோட்பாடுகள் குறித்த கருத்தரங்கம் பிற்பகல் 4 மணி அளவில் முனைவர் கு.சிவமணி தலைமையில் நடைபெறுகிறது. இதில் தொல்காப்பியரின் திருவுருவப் படத்தை புலவர் த. சுந்தரராசன் திறந்து வைக்கிறார். முனைவர்கள் பெ.சுயம்பு, இரா. காசிராஜன் போன்றோர் ஆய்வுரை நிகழ்த்துகின்றனர்.
தொல்காப்பியர் காலம் குறித்த இத்தீர்மானத்தை தமிழக அரசு ஏற்று, உலகச் செம்மொழி மாநாட்டில் தொல்காப்பியர் காலம் கி.மு.711 என்றும், அவரது நாள் அந்த ஆண்டின் சித்திரைத் திங்கள் முழுமதி நாள் (சித்திராப் பெளர்ணமி) என்றும் அறிவித்து, தொல்காப்பியர் புகழை நிலைபெறச் செய்யவேண்டும் என்று தமிழ்ச் சான்றோர் சார்பாக, பேராசிரியர் கு. சிவமணி, பேராசிரியர் தமிழண்ணல் மற்றும் ஆறு. அழகப்பன் போன்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications