பாளையங்கோட்டை-11ம் தேதி வீரன் அழகுமுத்துகோன் சிலை நிறுவும் விழா
நெல்லை: பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் வீரன் அழகுமுத்துகோன் சிலை வருகிற 11ம் தேதி நிறுவப்படும் என்று யாதவ மகாசபை தலைவர் தேவநாதன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் 1 கோடியே 10 லட்சம் யாதவர்கள் உள்ளனர். அதில் 60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலில் யாதவர்களுக்கு சுமார் 25 சீட்டுகளுக்கு குறையாமல் வழங்கும் எந்த கட்சியையும் ஆதரிப்போம்.
கடந்த ஏப்ரல் மாதம் நெல்லையில் நடந்த முதல் மாநில மாநாட்டில் வீரன் அழகுமுத்துகோன் சிலையை திறந்து வைத்தோம். ஆனால் எங்களுக்கு வீரன் அழகுமுத்துகோன் சிலையை திறப்பதற்கு அரசு அனுமதி ஆணை உடனடியாக வழங்காமல் கடந்த மே மாதம் 3ம் தேதிதான் வழங்கியது.
இதனால் வரும் 11ம் தேதி வீரன் அழகுமுத்துகோன் ஜெயந்தி நாளான்று மாலை 4 மணிக்கு பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் அரசு அனுமதி வழங்கிய இடத்தில் சிலை நிறுவும் விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் சுமார் 2 லட்சம் யாதவர்கள் கலந்து கொள்வார்கள். இதையொட்டி அன்று காலை வீரன் அழகுமுத்துகோன் பிறந்த தூத்துக்குடி மாவட்டம் கட்டலாங்குளத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் வீரன் அழகுமுத்துகோன் ஜெயந்தி விழா நடக்கும்.
பிறகு கட்டாலங்குளத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு சுமார் 2,000 வாகனங்களில் என்னுடைய தலைமையில் நடைபெறும் வீரன் அழகுமுத்துகோன் சிலை நிறுவும் விழாவில் கலந்து கொள்வார்கள் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications