முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது
Subscribe to Oneindia Tamil

முருகன் கோவில்களில் நடைபெறும் விழாக்களில், ஐப்பசி மாதம் நடைபெறக்கூடிய கந்த சஷ்டி மிக முக்கியமானது.
6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் மேற்கொண்டு, சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் பொருட் செல்வம், குழந்தைச் செல்வம் உள்ளிட்ட அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.
முருகப்பெருமான் சூரனை வதம் செய்த தலம் திருச்செந்தூர் என்பதால் சஷ்டி விழா திருச்செந்தூரில் மிகச்சிறப்பாக நடைபெறும்.
திருச்செந்தூர் தவிர முருகனின் அறுபடை வீடுகள் அனைத்திலும் இந்த விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா இன்று காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.












Click it and Unblock the Notifications