சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு எடுத்துக்காட்டு-குடியரசுத் தலைவர் மாளிகைக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்று

இதற்கான சான்றினை நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், வேரிடஸ் தரச்சான்று நிறுவன இயக்குநர் ஆர்.கே. ஷர்மாவிடம் இருந்து குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் உதவியாளர் கிறிஸ்டி பெர்னாண்டஸ் பெற்றுக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் மழை நீர் சேகரித்தல், சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரித்தல், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஐ.எஸ்.ஓ. 14001:2004 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பதவி ஏற்ற ஒரு வருடத்தில் ரோஷினி என்ற திட்டத்தை பிரதிபா பாட்டீல் அறிமுகப்படுத்தினார். இத் திட்டத்தின் படி, குடியரசுத் தலைவர் மாளிகையில் மழை நீர் சேகரித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, மரம் வளர்த்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், மாசுகளைக் கட்டுப்படுத்துதல், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துதல், சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரித்தல், இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துதல், பசுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், மாளிகை புதுப்பொலிவு பெற்றுள்ளது.
இது குறித்து குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறுகையில்,
நம் சுற்றுச்சூழலை பாதுகாக்க எந்த நிதியும ஒதுக்காமல் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இந்த திட்டத்தை வெற்றி பெறச் செய்த மாளிகையின் ஊழியர்களையும், அங்கு குடியிருப்பவர்களையும் நான் பாராட்டுகிறேன் என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications