தீபாவளி-திருப்பதி ஏழுமலையான் கேவிலில் கட்டண சேவைகள் ரத்து
வேலூர்: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருப்பதியில் நவம்பர் மாதம் 5-ம் தேதி மட்டும் கட்டண சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று கட்டண சேவைகளை ரத்து செய்வது வழக்கம். அடுத்த மாதம் 5-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே, அன்று மட்டும் கட்டண சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியதாவது,
தீபாவளிப் பண்டிகை அன்று நிஜபாத சேவை, தோமாலை சேவை, அர்ச்சனை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவம் போன்ற கட்டண சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
மாறாக தீபாவளி அன்று அதிகாலை முதலே சிற்பபு சேவைகள் நடக்கின்றன. அதிகாலை 1 மணிக்கு ஏழுமலையானின் ஆஸ்தான சேவை, 4 மணிக்கு ஏகாந்த திருமஞ்சன சேவை ஆகியவை நடைபெறுகின்றன.
காலை 7 மணி முதல் 9 மணி வரை ஏழுமலையானுக்கு புதிய பட்டாடைகள் உடுத்தி ஆஸ்தான சேவையும், தங்கவாசல் சேவையும் நடைபெறுகின்றன என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications