'ஏப்ரல் 29 - ஊடக விழிப்பு நாள்'

Subscribe to Oneindia Tamil

Sivaram
கொழும்பு: ஈழத்தில் பத்திரிகையாளர் சிவராம் படுகொலை செய்யப்பட்ட ஏப்ரல் 29ம் தேதியை இலங்கை ஊடகவியலாளர் விழிப்பு தினமாக பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று ஈழ பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்ற போது ஊடக தளத்திலும், தேச விடுதலைக்காகவும், அடக்குமுறைகளை எதிர்த்து, மக்களின் உரிமைக்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவர் தோழர் சிவராம் என்ற தராக்கி.

தராக்கி என்கிற இந்த 'ஊடகச்சமராடி', சர்வதேச பரப்பிலும், தேசிய விடுதலைப் போராடத்திற்கான நியாயப்பாடுகளை தனது பல் மொழி ஆளுமையின் ஊடாக கொண்டு சென்ற ஒரு மாமனிதன் என்றும்,

இவர், தமிழ் தேசிய விடுதலைப் போரின், ஊடகக்குறியீடு என்றும் தராக்கிக்கு பத்திரிகையாளர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இவர் ஜனநாயக மறுப்பாளர்களால் கடத்திச் சென்று படுகொலை செய்யப்பட்ட ஏப்ரல் 29ம் நாளினை, இலங்கை ஊடகவியலாளர் விழிப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டும் என ஈழ பத்திரிக்கையாளர்கள் குழு சார்பில் சர்வதேச பத்திரிகை உலகிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊடக அடக்குமுறையின் விழிப்பு தினமாக, இந்நாளை ஆண்டு தோறும் நினைவுகூருவது என்றும் ஈழ பத்திரிகையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+