ஜெட்டா தமிழ் மன்றம் தொடக்கம், தமிழ் கலாச்சார விழா

Subscribe to Oneindia Tamil

ஜெட்டா: சவூதி அரேபியாவில் நடைப்பெற்ற "ஜெட்டா தமிழ் மன்ற" துவக்க விழாவில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.

வியாழனன்று ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத்தூதரக வளாகத்தில் நடைப்பெற்ற கலாச்சார விழாவில் "ஜெட்டா தமிழ் மன்றத்தை" பேராசிரியர் பெரியார்தாசன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்குப்பின் பாண்டியன் வரவேற்புரை வழங்கினார். மீரான் மூஸா அவர்கள் பேராசிரியர் பெரியார்தாசன் அவர்களை அறிமுகம் செய்ய, ஜெட்டா தமிழ் மன்றத்தை பேராசிரியர் பெரியார்தாசன் முறைப்படி துவக்கிவைத்தார்.

கோபால் வேதா ஜெட்டா தமிழ் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அமீர் பாஷா அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சிக்கு சலீம் மற்றும் காசிம் ஷரீப் ஆகியோர் நேர ஒருங்கினைப்பாளர்களாக செயலாற்றினர். பின் ஜெட்டா தமிழ் மன்றத்தின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களையும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து முரளிதரன் மற்றும் விஜயேந்திரன் குழு பங்குப்பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சி இடம்பெற்றன.

சிறுவர்களை மகிழ்விக்கும் பொருட்டு சிறுவர்களான ஆல்பர்ட ஸ்டார்வின், ஜிதேஷ் குமரேஷ்பாபு, அஸ்வின் ராமச்சந்திரன், ஜிதின் சுரேஷ், ரவ்னவ் சந்துரு, வில்சன் வில்பிரெட், டென்சல் யேசுதாஸ், ரிஷிகேஷ் அஜித், மிதில் ராஜாகர் மற்றும் ராகேஷ் பாபு ஆகியோர் நடமாடினார். இந்த நிகழ்ச்சியை நடன இயக்குனர் ஷிந்தோ அண்டனி இயக்கினார்.

சிறுவர்களுக்காக ஓவியப்போட்டி ரவி மேனன் அவர்களால் நடத்தப்பட்டது.

நடன நிகழ்ச்சியையும், ஓவியப்போட்டியையும் சுதா ஜெய்சங்கர், ஆஷா ராமச்சந்திரன் மற்றும் பத்மப்ரியா குமரேஷ்பாபு ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தி, வெற்றிபெற்ற சிறுவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.

முஹம்மது இபுறாஹீம் மரைக்கார் அவர்கள் கவிஞர் அ. வெற்றிவேல் எழுதிய 'தாய் தமிழ்" கவிதையை வாசித்தார்.

சிறுவர்களான ஷாஹிதா, ஷாஹின், ஷாஹிந்தா ஆகிய உடன்பிறப்புகள் நடத்திய பிரமாண்டமான Surathi"s Miracles என்ற மாஜிக் ஷோ பற்றி பாராட்டவர்களே கிடையாது. குறிப்பாக சிறுவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

பேராசிரியர் பெரியார்தாசன் சிறப்புரையாற்றும் போது, 'படிப்பது ஏழு நிமிடம் தான் பயனளிக்கிறது திரும்பி படிக்கவில்லை என்றால்; தெரிந்து கொள்வது ஏழு மணிநேரம் தான் பயனளிக்கிறது திரும்பி அதைப்பற்றி யோசித்து தெரிந்துகொள்ளவில்லை என்றால்; இன்னொன்று மனப்பாடம் செய்வது ஏழு நாட்களுக்கு மேல் மறந்து போகிறது திரும்பி திரும்பி படிக்கவில்லை என்றால்.

கவனியுங்கள் ஆனால் இன்னொரு வழி இருக்கிறது, எந்த ஒன்றை பழகி கற்றுக்கொண்டாலும் பிள்ளைகளால் மறக்கவே முடியாது, பழகி கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்வதென்றால் என்ன என்று யோசித்துப் பாருங்கள், குழந்தைகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுத் தரும்போது, சைக்கிளில் அவர்களை உட்கார வைத்து ஹேண்டில் பாரை பிடிக்க செய்து நேராப்பார், குனியாதே, சைடில் பார்க்காதே என்று சொல்லி முதுகில் குத்தி குத்தி கற்றுத்தருவோம், இல்லைன்னா அந்த குழந்தை கீழே விழுந்துவிடும். ஆனால் அந்த குழந்தை சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்ட பின் அது நேராகவா பார்க்கிறது? சைடில் பார்த்தால் தான் சில பேர்களுக்கு நேராகவே சைக்கிள் ஓட்ட வரும்.

இதனால் என்ன தெரிகிறது, கற்றுக் கொண்ட பின், ஒரு வருஷம் சைக்கிள் ஓட்டாமல் இருந்தாலும் மீண்டும் எடுத்த உடனயே சைக்கிள் ஓட்ட முடியும். இதனால் என்ன நமக்கு புருகிறது, அந்த குழந்தை சைக்கிள் ஓட்ட படிக்கவில்லை, கற்றுக் கொண்டது என்று. அதுபோல் நீந்துவதை குழந்தை கற்றுக்கொள்கிறது. அதேபோல் கல்வியை குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

திருவள்ளுவர் படித்தார் என்றுச் சொல்லவில்லை, படித்தவர் என்று சொல்லவில்லை, கற்றறிந்தார் என்றே சொல்கிறோம். ஆக கற்றுக்கொள்வதற்கு பெயர் தான் கல்வி. குழந்தையை கற்றுக்கொள்ளச் செய்யுங்கள், அதற்கு என்ன செய்யவேண்டும். கற்றுக்கொள்வது எப்படி; பார்ப்பது, பார்த்ததையே சொல்வது, சொல்வதையே கேட்பது, இந்த மூன்றையும் செய்தால் எத்தனை ஆயிரம் பக்கங்களாக இருந்தாலும் கற்றுக்கொள்ளலாம்.

எதை நாம் மனம் வைத்து பார்க்கிறோமோ, எதை நாம் மனம் வைத்து சொல்கிறோமோ, எதை நாம் மனம் வைத்து கேட்கிறோமோ அதையே நம் மனம் பதிவு செய்கிறது. குழந்தைகளுக்கு படிப்பதற்கு இதுதான் வழி. சரி குழந்தைக்கு சொல்லியாட்சு பெரியவர்களுக்கு என்ன வழின்னு உங்களுக்கு கேட்கத்தோணும், பெரியவர்களுக்கும் இதுதான் வழி, அதாவது ஒருவரை ஒருவர் நேசித்து வாழ்வதற்கு பெயர்தான் குடும்ப வாழ்க்கை, வெறுப்பு புகுந்த மனம் உருப்படாது.

கணவனும் மனைவியும் அன்போடு மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள், அன்போடு மட்டும் பேசிக்கொள்ளுங்கள், அன்போடு மட்டும் செயல்படுங்கள், வெறுப்பை உள்ளுக்குள் விட்டு விடாதீர்கள் ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படுமோ உருப்படாதோ, குடும்பத்திற்குள், மனதிற்குள் வெறுப்பு புகுந்து விட்டால் குற்றம் காணும் குணம் வந்துவிட்டால், சந்தேகம் வந்துவிட்டால், உங்கள் மனம் சிதைந்து போகின்றது. சிதைந்த மனம் இன்பத்தை, குடும்பத்தை விட்டு விரட்டிவிடுகிறது. இதனால், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன.

இராமலிங்க அடிகளார் சொன்னார், ஒரு கைக்குள்ளேயே மலை அடங்கும் என்றார். ஆம், "அன்பெனும் பிடிக்குள், அகப்படும் மலையே, அன்பென்னும் கரத்து வந்தவராவதே", அன்பெனும் பிடிக்குள், அகப்படும் மலையே, ஆக அன்புக்கு மலையே அகப்படும் போது உங்கள் கணவன் அகப்பட மாட்டாரா, அல்லது மனைவி அகப்படமாட்டாரா, அல்லது குழந்தை அகப்பட மாட்டாரா.

அன்போடு மட்டுமே சிந்தியுங்கள், அன்போடு மட்டுமே பேசுங்கள், அன்போடு மட்டுமே அணுகுங்கள், அன்போடு மட்டுமே செயல்படுங்கள், இது தான் ஜித்தா தமிழ் மன்றத்தின் துவக்க விழாவில் தமிழர்களுக்கு இந்த எளிய பெரியார்தாசன் வைக்கிற செய்தி" என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் பெரியார்தாசன் அவர்களுக்கும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அமீர் பாஷா அவர்களுக்கும் நினைவுக்கேடயம் வழங்கப்பட்டது.

முன்னதாக திருமதி பானு ஹமீது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, இறுதியில் ஜாபர் சாதிக் நன்றியுரை கூறி தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

வந்திருந்த அன்னவர்களுக்கும் விழாக்குழுவினர்களால் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் ஏராளமான குழந்தைகள் கலந்துக்கொண்டனர்.

இந்த விழாவை 'ஜித்தா தமிழ் மன்றம்' ஏற்பாடு செய்து இருந்தது.

ஜெட்டாவிலிருந்து மு. இ. முஹம்மது இபுறாஹீம் மரைக்கார் இந்த தகவலை அனுப்பி வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+