17ம் தேதி நெல்லையப்பர் கோவிலில் ஆனி திருவிழா

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க இருக்கிறது.

நெல்லையப்பர் கோவிலில் ஆனி திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் 17ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் நடக்க இருக்கிறது.

பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்க உள்ளது. 18ம் தேதி காலை 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதியுலாவும், அன்றிரவு 7 மணி அளவில் சுவாமி வெள்ளி சப்பர விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது.

19ம் தேதி அன்று சுவாமி காலையில் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், இரவில் தங்க பூச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் வீதியுலா நடக்க இருக்கிறது. 20ம் தேதி அன்று காலை சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது.

அன்றிரவு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷிப வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. 21-ம் தேதி அன்று சுவாமி, அம்பாள் காலையில் வெள்ளி ரிஷிப வாகனங்களில் திருவீதியுலாவும், இரவில் இந்திர வாகனத்தில் வீதியுலாவும் நடக்கிறது. இத்திருவிழா ஜூன் 25ம் தேதிவரை நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+