ஒரு மணி நேரத்திற்கு ஒரு குறள் கூறும் மணிக்கூண்டு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, சென்னை பல்கலைக்கழகத்தின் மணிக்கூண்டில் மணிக்கு ஒருமுறை திருக்குறள் ஒலிக்கும் புதிய முறை தொடங்கப்பட்டுள்ளது.
இதை தொடங்கி வைத்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில்,
சென்னை பல்கலைக்கழகத்தின் மணிக்கூண்டில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு குறள் என்று தினமும் 24 திருக்குறள்கள் பொருளுடன் ஒலிக்கும். இதில் 1330 குறள்களும், விளக்கங்களும் உள்ளன. இது மாணவர்களுக்கு திருக்குறள் மீது ஆர்வம் ஏற்படுத்தும் பொருட்டு கொண்டு வரப்பட்டது் என்றார் அமைச்சர்.
மாநாட்டையொட்டி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான மாநில அளவு பேச்சு போட்டி, கவிதைப் போட்டிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு செம்மொழி மாநாட்டில் பரிசுகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications