'நக்கீரன்' கோபாலுக்கு தந்தை பெரியார் விருது
சென்னை: தமிழக அரசின் 2009ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது 'நக்கீரன்' இதழின் ஆசிரியர் கோபாலுக்கு வழங்கப்படுகிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைத்திடும் பெருமக்கள் ஆகியோரில் சிறந்தோரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதன்படி, 2010ஆம் ஆண்டிற்கான 'அய்யன் திருவள்ளுவர் விருது' முனைவர் ஐராவதம் மகாதேவனுக்கு வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
2009ம் ஆண்டிற்கு, சமூக நீதிக்கான 'தந்தை பெரியார் விருது'
நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கும், 'அறிஞர் அண்ணா விருது' முனைவர் ஔவை நடராசனுக்கும், 'அண்ணல் அம்பேத்கர் விருது' கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுக்கும், 'பெருந்தலைவர் காமராஜர் விருது' விருதுநகர் ஆர்.சொக்கர் (சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
மேலும், 'பாரதியார் விருது' டி.என்.இராமச்சந்திரனுக்கும், 'தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது' அண்ணாமலை என்ற இமயத்துக்கும், 'பாவேந்தர் பாரதிதாசன் விருது' கவிஞர் தமிழ்தாசனுக்கும், 'முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது' தாயம்மாள் அறவாணனுக்கும் வழங்கப்படுகிறது.
விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தமிழக அரசின் சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி, தங்கப் பதக்கம் வழங்கப்படும்.
வரும் 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று சென்னையில் நடைபெற உள்ள விழாவில் முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்குவார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications