காந்தியை பாதித்த புத்தகம் வெளியாகி 150 ஆண்டு நிறைவு
வாஷிங்டன்: மகாத்மா காந்தியை பெரிதும் பாதித்த புத்தகமான "அன்டூ திஸ் லாஸ்ட்" (Unto this last) வெளியிடப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
150 ஆண்டுகளுக்கு முன் "அன்டூ திஸ் லாஸ்ட்" என்னும் புத்தகம் வெளியிடப்பட்டது. இது பொருளாதாரம் குறித்த சிந்தனையை திருப்பிப் போட்டது. இந்த புத்தகம் நம் தேசத் தந்தை காந்தி உள்ளிட்ட பலரை பெரிதும் பாதித்தது.
மகாத்மா காந்தி தென்ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒரு நாள் பயணத்தில் இந்த புத்தகத்தை முதன்முதலாக வாசித்தார். அரசியல் பொருளாதாரம் குறித்த இதை ஜான் ரஸ்கின் என்பவர் கடந்த 1904-ம் ஆண்டு எழுதினார்.
இது குறித்து காந்தி தனது சுயசரிதையில் எழுதியிருப்பதாவது,
அந்த புத்தகத்தை வாசிக்க்த் துவங்கிய பிறகு கீழே வைக்க முடியவில்லை. அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது. ஜொஹன்னஸ்பர்கில் இருந்து டர்பனுக்கு செல்ல 24 மணி நேரம் ஆனது. டர்பனில் மாலை நேரம் வந்து இறங்கினேன்.
அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. அதில் குறிப்பிடப்பட்டுள்ள குறி்க்கோளின்படி எனது வாழ்க்கையை மாற்றியமைக்க தீர்மானித்தேன்.
இது எனது வாழ்க்கையையே மாற்றி விட்டது என்று எழுதியுள்ளார்.
"அன்டூ திஸ் லாஸ்ட்" புத்தகம் எழுதுகையில் ரஸ்கின் நடுத்தர வயது எழுத்தாளர். இதற்கு முன் அவர் "தி செவன் லாம்ப்ஸ் ஆப் ஆர்கிடெக்சர்", "தி ஸ்டோன்ஸ் ஆப் வெனிஸ்" ஆகிய 2 பிரபலமான நூல்களை எழுதியிருந்தார்.
முதலாளித்துவம் குறி்த்து ஆராய்ந்து எழுதப்பட்ட இது கடந்த 1860-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இது முதலில் கார்ன்ஹில் பத்திரிக்கையில் ஒரு தொடராக 4 பகுதிகளாக வந்தது. பின்னர் 18 மாதங்கள் கழித்து ஒரே புத்தகமாக்கப்பட்டது.
இதில் பிரபல பொருளாதார மேதைகளான ஆடம் ஸ்மித், டேவிட் ரிகார்டோ மற்றும் ஜான் ஸ்டூவர்ட் மில் ஆகியோரின் கொள்கைகள் நிராகரிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
"அன்டூ திஸ் லாஸ்ட்" என்னும் பெயர் புனித மேத்யூவின் போதனைகள் அத்தியாயம் 20ல் இருந்து எடுக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications